Posts

Showing posts from November, 2022

தாய்த் தெய்வம்.

 கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம் தமிழர்களின் கடல்துறைத் தெய்வமாகத் தோன்றியிருக்க வேண்டும். 'கடல்கெழு செல்வி' என்று சங்க இலக்கியம் (அகநா.370) குறிப்பிடும் பழைய தாய்த் தெய்வமும் அதன் சடங்குமுறைகளும் எவ்வாறு மறைந்து போயின என்று தெரியவில்லை. மீனைக் குலக் குழுச் சின்னமாகவும் கொடியாகவும் கொண்ட பாண்டியர் எனும் அரசமரபு தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றது. அவர்களுடைய தலைநகர்த் தெய்வமும் மீனோடு கூடிய பெயர் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியக் குறிப்பின்படி சுறாக் கொம்பை நட்டு வழிபட்ட 'தென் பரதவர்' என்னும் சாதியும் பிற மீனவச் சாதிகளும் நெடிய கடற்கரையும் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகம் முழுவதிலும் பரவலாக நாட்டார் தெய்வப் பெயரிடு முறைகளிலும் மீனா, மீனாள், மீனாட்சி ஆகிய பெயர்களின் செல்வாக்கினை நம்மால் மறுதலிக்கவியலாது. தந்தைத் தெய்வம் இல்லாமல் தனித்த தாய்த் தெய்வமாகத் தமிழ்நாட்டு அரசர்கள் குமரித் தெய்வத்தைக் கொண்டாடி இருக்கின்றனர் என்ற செய்தி கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. இக்குமரித் தெய்வமே சங்ககாலத் தமிழர்களின் 'கடல்கெழு செல்வியாக' இருக்க வேண்டும். இந்நினைவுகளில்...

நாளைய இயக்குநர்களுக்கான பாடத்திட்டம்?

 நாளைய இயக்குநர்களுக்கான பாடத்திட்டம்? தினமும் ஐம்பது கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும். இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். ஒரு திரைப்படைப்பாளிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும். அது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை, மனோபலத்தை கொடுக்கும். எதையும் எதிர்கொள்கிற துணிச்சல் கொடுக்கும். ஏனெனில் ஈரானில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வகையான போர்முறை. "கந்தகார்’ திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்திலிருந்து பத்து மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமராவிலிருந்து எல்லாவற்றையும் நொடியில் தூக்கிக்கொண்டு ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எந்த நாடாக இருந்தாலும் படம் எடுக்கிறவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பலம், பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும் அல்லவா. முதலில் உடல் உறுதியாக வேண்டும். அதிலிருந்து மனம் உறுதியாகும். எங்கள் திரைப்படக் கல்லூரியில் இலக்கியம் படிக்க வேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படித்துக் கொண்டிருப்போம். வாசிக்க சொல...

ஷோபா எனும் தேவதை.

தேவலோக வாசிகளான தேவதைகள் பல் யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா ஷோபா ஒரு எரி நட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம் அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். "மூன்றாம் பிறை படம் மூலமாக. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக் கொண்டேன். அப்படித் தீர்த்துக் கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன். ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு.... எனக்கு...... எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்... பாலுமகேந்திரா

திருக்குறளை இயேசு நாதரின் இதய ஒளி, மலைப் பிரசங்கத்தின் அடிநாதம் என்று துணிந்து கூறினார்."

Image
திருக்குறளை இயேசு நாதரின் இதய ஒளி, மலைப் பிரசங்கத்தின் அடிநாதம் என்று துணிந்து கூறினார்." ஜி.யு.போப் ஜார்ஜ் யுக்ளோ போப் எனப்படும், இங்கிலாந்தைச் சார்ந்த இந்தப் பெருமகன், வெஷ்லியன் மிஷன் சார்பில் தன் 19-ம் வயதில் தமிழகம் வந்தார். மகாவித்வான் ராமானுஜ கவிராயரிடம் தமிழ் கற்று, திருக்குறள், நாலடியார் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஒவ்வோர் ஆங்கிலப் புத்தாண்டு அன்றும், ஒரு புறப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் தொகுப்பாக ‘Extracts from purananuru and purapporul venba malai' என்ற நூலை வெளியிட்டார். 'Elementry of Tamil Grammar 3 vol' என மூன்று பாகம் கொண்ட இலக்கண நூலையும், 'Poets of the tamil land the lives of tamil land' நூலையும் வெளியிட்டார். சிவஞான போதத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தன் 80-ம் வயதில் திருவாசகத்தை மொழிபெயர்க்க ஆசைப்பட்டு, வயோதிகம் கருதி தயங்கிய நிலையில், துணிந்து அந்தப் பணியில் இறங்கி, அதைச் மொழிபெயர்த்து வெளியிட்டார். செம்மையாக தமிழ் நூல்களை உலக அரங்கிற்கு கொண்டுசென்ற பெருமை இவரையே சாரும். "  தி...

தமிழர் நீரியியல் தொழில்நுட்பம்.

தமிழ் நாட்டு மலைப் பகுதிகளில் 'ஐவனம்' போன்ற தானியங்களை விவசாயம் செய்வதிலும், பயிரிடும் முறையிலும் நிலத்தைப் பயன்படுத்தி மழை நீர் அரிப்பில்லாது தடுப்பதிலும் தனித்திறமை பெற்றவர்களாகத் தமிழர்கள் பண்டு திகழ்ந்தார்கள். இந்த முறையை அவர்தள் வணிக நிமித்த மாகவோ அன்றி வேறு காரணங்களுக்காகவோ தாங்கள் சென்ற வெளிநாடுகளிலெல்லாம் பரப்பியுள்ளார்கள், குறிப்பாக, ஆஃப் ரிக்க நாடுகளில் மலைப்பகுதிகளில் பயிரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே என்பதற்கான ஆதாரங்களை ஃபிளமிங் போன்ற புகழ்பெற்ற ஜெர்மானிய பொறியியல் வல்லுநர்கள் ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்கள். மேலும், எத்தியோப்பியாவில் உற்பத்தியாகி எகிப்து வழியாக ஓடி அலெக்சாந்திரியாவில் கடலில் வீணே கலந்துவந்த நைல் நதியால் எகிப்து எவ்விதப் பயனையும் பெற இயலாமலே நீண்ட காலம் இருந்தது. நீரை தரை உறிஞ்சாமலும் அணையில் நீர்க்கசிவு ஏற்படாமலும் சமதளத் தரையில் அணை கட்டும் கட்டுமான தொழில் நுட்பத்திறனை தமிழர் மட்டுமே பெற்றிருந் தனர் என்பதற்கு இன்றும் காட்சியாக விளங்குவது கல்லணை ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்த தமிழர்களின் நீரியல் ...

சோழர் படை.

ராஜராஜ சோழன் தன் படைகளை எந்தளவுக்கு வலுவாக வைத்திருந்தார். என்பதற்கு கி.பி. 1178ல் சீன அறிஞர் ஒருவர் ராஜராஜனின் சோழற்படையை விவரித்ததை வைத்து அறிந்துகொள்ளலாம். இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபதாயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் ஆறு அல்லது ஏழடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகள்மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் அமர்ந்து வீரர்கள் வெகுதூரத்துக்கு அம்பு எய்துகிறார்கள். வீரர்கள் ஈட்டிகளாலும் எதிரிகளைத் தாக்குகிறார்கள். வெற்றி அடைந்தவுடன் யானைகள் கௌரவிக்கப்படுகின்றன. அவற்றுக்குத் தங்கத்தாலான அம்பாரிகள் பரிசாகத் தரப்படுகின்றன. அரசர் முன்பு ஒவ்வொரு நாளும் யானைகள் கொண்டுவரப்படுகின்றன. நிஜம்தான். ராஜராஜன் காலத்தில் பலம் வாய்ந்த மூன்று வகைப் படைகள் இருந்தன. அவை யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்பன. இவை தவிர கப்பற்படையும் ராஜராஜனின் சிறந்த போர் ஆயுதமாக விளங்கியது. அம்பாசமுத்திரத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டொன்று, ராஜராஜன் போர்ப்படை எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பொருத்தமாக விளக்குகிறது. 'மூன்று மகா சேனை வீரர்கள் (அதாவது மூன்று அங்கங...

சிலப்பதிகாரம் மொத்தமே 5001 அடிதான். அதுல 5000 தாவரப் பெயர்கள் எழுதியிருக்கார்.

குறைந்தது 3000 தாவரப் பெயர்களாவது சிலப்பதிகாரத்துல இருக்கு. சிலப்பதிகாரம் மொத்தமே 5001 அடிதான். அதுல 5000 தாவரப் பெயர்கள் எழுதியிருக்கார். தாவரங்களுக்கு அவர் தருகிற மதிப்பு இருக்குல்ல, முன்னொட்டுகளைப் பார்த்தாலே அற்புதமா இருக்கும். தாவரங்களை அடையாளப்படுத்துகிற முறை மிக அருமையா இருக்கும். உதாரணமா மதுரைக்கு கோவலன், கண்ணசி வரும்போது வைகையாற்றில் மிதந்து வருகிற பூக்களைப் பார்த்து இளங்கோவடிகள் பெரிய பட்டியல் கொடுப்பார். குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் அதச் சொல்லிட்டு அத இலக்கியத்தோடு இணைப்பதைப் பார்க்கணும். அத கோவலனும், கண்ணகியும் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் என்று ஒரு பெரிய பட்டியல் கொடுப்பார். புனல்யா றன்றிது பூம்புனல் யாறென அனந...

சேர சோழ பாண்டியர்.

 'தமிழுக்' (Tamuluk) எனப் பெயர் பெற்றிருந்த சிறந்த வியாபாரத்தலத்திற் குடியேறினர். இங்ஙனம் குடியேறிய இம்மக்களும் பழைய தமிழ்மக்களோடு தலைப்பெய்து,அவாது ஒழுகலாற்றினைத் தாமும் கைக்கொண்டொழுகி, அவர் வேறு தாம் வேறு என்றறியா வண்ணம் தமிழராயினர். இத்தமிழ்மக்கள் நாளடைவிற் பல்குற்றமையின், தமக்குப் போதுமான விடம் நாடுதல் காரணமாகத் தென்னாடுகளிற் புகுந்து, அங்கு வாழ்ந்திருந்த நாகர் ? முதலியோரை வென்று, நாட்டைக் கைக்கொண்டு, வடவேங்கடம் தென்குமரிக்கு இடையேயுள்ள காடுகளிற்றங்கி, ஆட்சி புரிவாராயினார். இவர்கள் ஆட்சிபுரிந்த இடமே 'தமிழகம்' எனப்படும். இவ்வாறு, காட்டைத் தம்வசப்படுத்த முதன்முதல் முயன்ற தமிழ்மக்கள் குழுவிற்குத் தலைமை வகித்தவர், ஏனையோரை கோக்கப் பழைமை வாய்ந்திருந்தமையின், ‘பழையர் ' ' என அழைக்கப்பெற்றனர் ; இவர்களை பாண்டியராவார். * இவர்க்குப் பின் கடல் வழியாக வந்தவர். 'திரையர்  என்றழைக்கப்பெற்றனர். இவர்களே சோழர்களாவார். இவர்க்குப்பின் வந்தவர், கொல்லி, நிலகிரி முதலிய மலைகளைத் தமக்கு வாழும் இடமாகக் கொண்ட கற் கேற்பத், தம்முன் னார்களைப் போலவே தம்மை 'வானவர்  என வழங்குவாராயினர்...

சாவா மூவா பேராடு.

 கோவிலில் தினமும் விளக்கேற்ற, எண்ணெய் வேண்டுமல்லவா? அதற்காக 'சாவா மூவா பேராடு' என்று ஒரு திட்டத்தை உருவாக்குகிறார். கோயிலுக்கு தானம் வழங்குபவர்களிடம் மாடுகளை தானமாகத் தருமாறு அரசு உத்தரவு இடப்படுகிறது. அதன்படி கிடைத்த ஆடு மாடுகளை ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பிரித்துக்கொடுத்து அவர்கள் அந்த உயிரினங்களை பராமரித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் பெரும்பங்கை அவர்கள் எடுத்துக்கொண்டு ஒரு பங்கை நம் கோயிலுக்கு தீபம் ஏற்ற எண்ணெயாக, நெய்யாக வழங்கவேண்டுமென்று திட்டம் வகுத்தார். இதுதான் சாவா மூவா பேராடு திட்டமாகும். திருக்கோயில் தீபமேற்றும் பணியும் தொடர்ச்சியாக நடைபெறும். மக்களின் வாழ்வாதாரமும் தடையின்றி மேம்படும் என்பதற்காக செயல்படுத்தப்பட்ட மன்னனின்(ராஜராஜசோழன்) பாந்துபட்ட சிந்தனைத் திட்டமாகும்! 

ஆஸ்திரேலியா பழங்குடிகள் தமிழர்கள்..

ஆஸ்திரேலியாவில் வாழ்கிற கறுப்பு இன ஆதிவாசிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆஸ்திரேலியக் கறுப்பின ஆதிவாசிகளின் பண்பாடு பழக்க வழக்கங்கள் பழந்தமிழரோடு ஒத்துப்போகின்றன. மலைகளை, பெரிய மரங்களை, பாம்புகளை, சூரியனை, சந்திரனை அவர்கள் வியந்து மரியாதை வணக்கம் செய்கிறார்கள். தேகத்தில் விபூதி போன்ற வெள்ளை நிறத்தைப் பூசிக்கொண்டு நடனமாடுவார்கள். அவர்கள் பேசுகிற மொழியே பழந்தமிழ் மொழியோடு ஒத்தது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதற்கேற்றாற்போல் தமிழ்ச்சொற்கள் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் @{Aborginis) மொழிகளில் கலந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய சிட்னி மாநகரின் புறநகர்ப் பகுதியின் பெயர் 'விண்மலே' (Winmalle). அந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் ஆகாயமும் மலைகளும் ஒட்டி நிற்பதைப்போல் தெரியும். அவ்வாறு விண்ணும் மலையும் இணைந்திருப்பதையே 'விண்மலை' என்று சொல்லலாம். அதையே 'விண்மலே' என்கின்றனர். இன்னொரு இடம் காகாடு (Kakadu). தமிழில் கா என்றால் சோலை. காடு என்றால் வனம் என்று சொல்வர். காகாடு என்றால் சோலை வனம்தான். உண்மையில் அந்த இடம் சோலை வனம்தான். ஆயிரக்கணக்கான பயணிகளை இழ...