சேர சோழ பாண்டியர்.

 'தமிழுக்' (Tamuluk) எனப் பெயர் பெற்றிருந்த சிறந்த வியாபாரத்தலத்திற் குடியேறினர்.

இங்ஙனம் குடியேறிய இம்மக்களும் பழைய தமிழ்மக்களோடு தலைப்பெய்து,அவாது ஒழுகலாற்றினைத் தாமும் கைக்கொண்டொழுகி, அவர் வேறு தாம் வேறு என்றறியா வண்ணம் தமிழராயினர். இத்தமிழ்மக்கள் நாளடைவிற் பல்குற்றமையின், தமக்குப் போதுமான விடம் நாடுதல் காரணமாகத் தென்னாடுகளிற் புகுந்து, அங்கு வாழ்ந்திருந்த நாகர் ? முதலியோரை வென்று, நாட்டைக் கைக்கொண்டு, வடவேங்கடம் தென்குமரிக்கு இடையேயுள்ள காடுகளிற்றங்கி, ஆட்சி புரிவாராயினார். இவர்கள் ஆட்சிபுரிந்த இடமே 'தமிழகம்' எனப்படும்.


இவ்வாறு, காட்டைத் தம்வசப்படுத்த முதன்முதல் முயன்ற தமிழ்மக்கள் குழுவிற்குத் தலைமை வகித்தவர், ஏனையோரை கோக்கப் பழைமை வாய்ந்திருந்தமையின், ‘பழையர் ' ' என அழைக்கப்பெற்றனர் ; இவர்களை பாண்டியராவார். * இவர்க்குப் பின் கடல் வழியாக வந்தவர். 'திரையர்  என்றழைக்கப்பெற்றனர். இவர்களே சோழர்களாவார். இவர்க்குப்பின் வந்தவர், கொல்லி, நிலகிரி முதலிய மலைகளைத் தமக்கு வாழும் இடமாகக் கொண்ட கற் கேற்பத், தம்முன் னார்களைப் போலவே தம்மை 'வானவர்  என வழங்குவாராயினர்; இன்னவர்களே சேராாவார். ஆகவே, சேர சோழ பாண்டியர்கள் தமிழ்மக்கள் என்பது இவற்றல் விளங்கக் கிடத்தளின், 'சோழர்குடி' என்றது 'தமிழ்ப் பழங்குடி' என்பது பெற்றாம்.

 தென்னாட்டுப் பழங்குடிகளில் ஒரு சாரார், பாம்பினை வழிபட்டு வந்தமையானும், ஐந்தலை, முத்தலைகளையுடைய நாகவடிவின் தைத்தம்முடியில் தரித்துவந்தமையானும் இப்பெயர் பெற்றலனர்.

 பழையன் மாறன். பழைமை எனப் பொருள்படும் பண்டு என்னும் சொல்லடியாகப் பிறந்த பண்டையர் என்பது பாண்டியர் என மரீஇ நின்றது.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.