சோழர் படை.
ராஜராஜ சோழன் தன் படைகளை எந்தளவுக்கு வலுவாக வைத்திருந்தார். என்பதற்கு கி.பி. 1178ல் சீன அறிஞர் ஒருவர் ராஜராஜனின்
சோழற்படையை விவரித்ததை வைத்து அறிந்துகொள்ளலாம். இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபதாயிரம் போர் யானைகள்
உள்ளன. ஒவ்வொரு யானையும் ஆறு அல்லது ஏழடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகள்மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் அமர்ந்து வீரர்கள் வெகுதூரத்துக்கு அம்பு எய்துகிறார்கள். வீரர்கள் ஈட்டிகளாலும் எதிரிகளைத் தாக்குகிறார்கள். வெற்றி அடைந்தவுடன் யானைகள் கௌரவிக்கப்படுகின்றன. அவற்றுக்குத் தங்கத்தாலான அம்பாரிகள் பரிசாகத் தரப்படுகின்றன. அரசர் முன்பு ஒவ்வொரு நாளும் யானைகள் கொண்டுவரப்படுகின்றன.
நிஜம்தான். ராஜராஜன் காலத்தில் பலம் வாய்ந்த மூன்று வகைப் படைகள் இருந்தன. அவை யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்பன.
இவை தவிர கப்பற்படையும் ராஜராஜனின் சிறந்த போர் ஆயுதமாக விளங்கியது. அம்பாசமுத்திரத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டொன்று, ராஜராஜன் போர்ப்படை எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பொருத்தமாக விளக்குகிறது.
'மூன்று மகா சேனை வீரர்கள் (அதாவது மூன்று அங்கங்களைக் கொண்ட பெரும் சேனை என்று அர்த்தம்),
விஷ்ணுவையும் சிவபெருமானையும் வழிபட்டனர்; கன்னரதேவனைத் தோற்கடித்துத் துரத்தினர். காங்கேயனைக் கொன்றனர்; கடல் கடந்து கிழக்குத் திசை நோக்கிச் சென்று மாத்தோட்டத்தை அழித்தனர்; மலை நாட்டைக் கைப்பற்றினர்; வள்ளன் என்கிற சாளுக்கியரை ஓடஓட விரட்டினர்; வனவாசி நகரைக் கைப்பற்றினர்; தங்களை எதிர்த்த வடுகர்களை முறியடித்தனர்; வாதாபிக் கோட்டையைத் தகர்த்து அந்நகரைக் கைப்பற்றினர்; இவர்கள் மூவகையான சேனையைச் சேர்ந்த அஞ்சாநெஞ்சம் படைத்த வீரர்கள்.’
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்துப் படைகளுக்கும் ராஜராஜனே தலைவராக இருந்தார். ராஜராஜனின் எழுபது போர்ப்படைகளின் விவரங்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்று உள்ளன.
Comments
Post a Comment