திருக்குறளை இயேசு நாதரின் இதய ஒளி, மலைப் பிரசங்கத்தின் அடிநாதம் என்று துணிந்து கூறினார்."
திருக்குறளை இயேசு நாதரின் இதய ஒளி, மலைப் பிரசங்கத்தின் அடிநாதம் என்று துணிந்து கூறினார்."
ஜி.யு.போப் ஜார்ஜ் யுக்ளோ போப் எனப்படும், இங்கிலாந்தைச் சார்ந்த இந்தப் பெருமகன், வெஷ்லியன் மிஷன் சார்பில் தன் 19-ம் வயதில் தமிழகம் வந்தார்.
மகாவித்வான் ராமானுஜ கவிராயரிடம் தமிழ் கற்று, திருக்குறள், நாலடியார் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஒவ்வோர் ஆங்கிலப் புத்தாண்டு அன்றும், ஒரு புறப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் தொகுப்பாக ‘Extracts from purananuru and purapporul venba malai' என்ற நூலை வெளியிட்டார். 'Elementry of Tamil Grammar 3 vol' என மூன்று பாகம் கொண்ட இலக்கண நூலையும், 'Poets of the tamil land the lives of tamil land' நூலையும் வெளியிட்டார். சிவஞான போதத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தன் 80-ம் வயதில் திருவாசகத்தை மொழிபெயர்க்க ஆசைப்பட்டு, வயோதிகம் கருதி தயங்கிய நிலையில், துணிந்து அந்தப் பணியில் இறங்கி, அதைச் மொழிபெயர்த்து வெளியிட்டார். செம்மையாக
தமிழ் நூல்களை உலக அரங்கிற்கு கொண்டுசென்ற பெருமை இவரையே சாரும்.
" திருக்குறளை இயேசு நாதரின் இதய ஒளி, மலைப் பிரசங்கத்தின் அடிநாதம் என்று துணிந்து கூறினார்." இதுபற்றி வ.வே.சுஐயர் கூறும்போது, 'pope speaks of the kural as the one oriental book much of whose teachings is an echo of the sermon of the mount' - vvs iyer சைவத்தையும் சைவ சித்தாந்தத்தையும் நன்குணர்ந்து அதன் பெருமை பற்றி சொல்கிறார், 'saivism is the real religion of south india siddhanta philosophy has and deserves to have for more influence than anyother.."
சித்தாந்த தீபிகை பத்திரிகை எடிட்டர் நல்லசாமி பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில், தன் கல்லறைக்கு ஆகும் செலவில் ஒரு பகுதியாவது தமிழ் மக்களுடையதாக இருக்க வேண்டும் என்றும், தன் கல்லறையில் தான் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Comments
Post a Comment