ஆஸ்திரேலியா பழங்குடிகள் தமிழர்கள்..

ஆஸ்திரேலியாவில் வாழ்கிற கறுப்பு இன ஆதிவாசிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆஸ்திரேலியக் கறுப்பின ஆதிவாசிகளின் பண்பாடு பழக்க வழக்கங்கள் பழந்தமிழரோடு ஒத்துப்போகின்றன. மலைகளை, பெரிய மரங்களை, பாம்புகளை, சூரியனை, சந்திரனை அவர்கள் வியந்து மரியாதை வணக்கம் செய்கிறார்கள். தேகத்தில் விபூதி போன்ற வெள்ளை நிறத்தைப் பூசிக்கொண்டு நடனமாடுவார்கள். அவர்கள் பேசுகிற மொழியே பழந்தமிழ் மொழியோடு ஒத்தது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதற்கேற்றாற்போல் தமிழ்ச்சொற்கள் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் @{Aborginis) மொழிகளில் கலந்திருக்கின்றன.


ஆஸ்திரேலிய சிட்னி மாநகரின் புறநகர்ப் பகுதியின் பெயர் 'விண்மலே' (Winmalle). அந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் ஆகாயமும் மலைகளும் ஒட்டி நிற்பதைப்போல் தெரியும். அவ்வாறு விண்ணும் மலையும் இணைந்திருப்பதையே 'விண்மலை' என்று சொல்லலாம். அதையே 'விண்மலே' என்கின்றனர். இன்னொரு இடம் காகாடு (Kakadu). தமிழில் கா என்றால் சோலை. காடு என்றால் வனம் என்று சொல்வர். காகாடு என்றால் சோலை வனம்தான். உண்மையில் அந்த இடம் சோலை வனம்தான். ஆயிரக்கணக்கான பயணிகளை இழுக்கும் அந்த காகாடு ஓர் சோலைவனம்தான்.


இன்னொரு ஆதிவாசி வசனம். 'பூனங்கா யிங்கவா'. அதன் அர்த்தம் பெண்ணே இங்கே வா என்பதுதான். இப்போது அந்த ஆதிவாசி வசனத்தைத் திரும்பவும் படியுங்கள். 'பூனங்கா மிங்கவா'. அதன் உண்மையான உச்சரிப்பு; பூ நங்கையே இங்கே வா என்பதே! இப்படித் தமிழுக்கும் அவர்களுக்கும் ஒரு உறவு இருக்கிறது; இருக்க வேண்டும்.


அதே நேரத்தில் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளும் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நாட்டுக்கு குடியேறியவர்கள் என ஆய்வு தெரிவிக்கின்றது. அவர்கள் எங்கிருந்து குடியேறினார்கள் என்பது இன்னமும் ஆய்விலேயே இருக்கிறது.


ஆப்பிரிக்க மடகாஸ்கர் தீவு பழங்குடி கறுப்பின மக்களுக்கும் ஆதித் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். அம்மக்களின் மொழியில் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கின்றனவாம்.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.