சிலப்பதிகாரம் மொத்தமே 5001 அடிதான். அதுல 5000 தாவரப் பெயர்கள் எழுதியிருக்கார்.

குறைந்தது 3000 தாவரப் பெயர்களாவது சிலப்பதிகாரத்துல இருக்கு. சிலப்பதிகாரம் மொத்தமே 5001 அடிதான். அதுல 5000 தாவரப் பெயர்கள் எழுதியிருக்கார். தாவரங்களுக்கு அவர் தருகிற மதிப்பு இருக்குல்ல, முன்னொட்டுகளைப் பார்த்தாலே அற்புதமா இருக்கும். தாவரங்களை அடையாளப்படுத்துகிற முறை மிக அருமையா இருக்கும். உதாரணமா மதுரைக்கு கோவலன், கண்ணசி வரும்போது வைகையாற்றில் மிதந்து வருகிற பூக்களைப் பார்த்து இளங்கோவடிகள் பெரிய பட்டியல் கொடுப்பார்.

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்

பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் அதச் சொல்லிட்டு அத இலக்கியத்தோடு இணைப்பதைப் பார்க்கணும். அத கோவலனும், கண்ணகியும் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் என்று ஒரு பெரிய பட்டியல் கொடுப்பார்.

புனல்யா றன்றிது பூம்புனல் யாறென

அனநடை மாதரும் ஐயனுந் தொழுது

என்று கையெடுத்துக் கும்பிடுறாங்க. புனல் ஆறல்ல பூ ஆறு. அத இலக்கியத்தோடு தொடர்புபடுத்துகிறார். வைகைப் பெண் இவங்க ஆற்றுக்கு அக்கரைக்குப் போய் இவர்கள் படப்போற கஷ்டம் தெரியுது. அதனால கண்ணீர் மல்கிச் சுரந்தது. அந்தக் கண்ணீரைப் பூவாடை கொண்டு மறைச்சுட்டான்னு சொல்வார் இளங்கோவடிகள்.

கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் தையலும் கணவனும் தனித்துறு துயரம் வெள்ளநீர்ப் பண்ணையும் விரிதிர் ஏரியும் காய்க்குளா தங்கும் வாழையும்

ஐயமின்றி அறிந்தன போலப் பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக்கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரலெபனபோல் மறித்துக்கை காட்டப் புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி

பேராசிரியர் தொ.ப.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.