Posts

Showing posts from October, 2022

இந்து தர்மம்." (குரு கோல்வாக்கர் எழுதிய 'Bunch of thoughts' நூல் பக்கம் 138 - 13

அவர்கள் கூறும் இந்து ராஷ்டிரம்' என்பது பார்ப்பன ராஷ்டிரம் தான் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சுட்டிக் காட்ட கும்வும். ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வேத நூல் என்று அவர்களால் போற்றப்படும் ஒரு நூலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் எழுதியிருக்கிறார்! இந்து ராஷ்டிரம்' என்றால் அது எப்படிப்பட்ட சமூக அமைப்பைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்கு பழையகால நிகழ்ச்சி ஒன்றை பெருமையோடு எடுத்துக்காட்டி இதுதான் "இந்து ராஷ்டிரம்" என்று மார்தட்டிக் கொள்கிறார்! கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன? இதோ படியுங்கள். "தென்னாட்டில் ஒரு ஆங்கிலேயே அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேயே அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது பிராமண பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேயே அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமணப் பியூனைப் பார்த்தவுடன் காலை...

கடவுளுக்கும் தெய்வத்துக்குமான வித்தியாசம் என்ன?

தெய்வம் கூட இருக்கிறது, உதவி பண்றது. கூட வர்றது.தெய்வம்கிற சொல் பழைய வேர்ச்சொல் தெய்யாட்டம்னு மலையாளத்துல ஒரு ஆட்டம் இருக்கு. தெய்வத்துக்கு ஆடுகிற ஆட்டம் ஆடியும், பாடியும் இயற்கை சார்ந்த, இயற்கையை மீறிய ஒன்றை வழிபட்டதுதான் தெய்வம், அரசுகள் உருவாக்கத்தின்போதுதான் மதங்கள் உருவாகுது. அப்ப அந்தத் தெய்வ வழிபாடுகள் எல்லாம் சேர்த்து மதமாக்குறான். சிவபெருமானே ஒரு Tribal chieftain. அதாவது பழங்குடியைச் சேர்ந்த குறுநிலத் தலைவன் அப்படிம்பாரு நாட்டார் வழக்காற்றியல் வகுப்பெடுத்த பேராசிரியர். சிவபெருமான் தலையில மாட்டுக் கொம்பு இருக்கு. ஊமத்தம் பூ இருக்கு, ஒரு இனக்குழுத் தலைவன் தன்னை எப்படி அலங்கரித்துக் கொள்கிறானோ அந்த மாதிரிதான் இருக்கு. அரப்பால இருந்த பசுபதி வழிபாடும் அப்படித்தான் என்பார் பாண்டு என்னும் நாட்டுப்புற ஆய்வாளர். -பேரா.தொ.ப

பள்ளி' என்ற சொல்லுக்குப் படுக்கை என்று பொருள். 'பள்ளியறை' என்றால் படுக்கையறை, 'பள்ளி கொள்ளுதல்" என்றால் உறங்குதல். இந்தச் சொல் எப்படிக் கல்வி நிலையத்தைக் குறிப்பதாயிற்று?

கிறித்துவுக்கு இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகம் வந்த சமண மதத்தின் திகம்பரத் துறவிகள் மலைக்குகைகளில் தங்கத் தொடங்கினர். சமண மதத்தின் கொடையாளர்கள் இவ்வகையான ஆடையில்லாத் துறவிகளுக்காக அவர்கள் தங்கும் குகையின் தரைப் பகுதியைப் படுக்கைபோலச் சமதளமாகச் செதுக்கிக் கொடுத்தனர். அந்தக் குகைகளுக்கு அருகில் மழைத் தண்ணீர் தேங்குவதற்கு ஒரு சிறிய குழி வெட்டப்பட்டிருக்கும். அந்தத் துறவிகளிடம் நீருண்ணும் பாத்திரம்கூடக் கிடையாது. அவர்கள் எட்டு நாள் (அட்டோபவாசம்), பதினாறு' நான் (சோடசோபவாசம்) உண்ணா நோன்பு இருக்கும் வழக்கம் உடையவர்கள். உண்ணா நோன்புக் காலத்தில் அருகில் இருக்கும் குழியிலுள்ள மழைநீரைக் கையினால்  ஏந்தி அருந்துவார்கள். மக்களின் மருத்துவ உதவிக்காகச் சில மூலிகைகளும் ஏடுகளும் மட்டும் அந்தக் குகையில் இருக்கும். காலத்தால் முற்பட்ட தமிழ் (தமிழி - தமிழ் பிராமி) எழுத்துக்கள் இவ்வகை சமணக் குகைத் தளங்களிலிருந்தே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட குகைத் தளங்களை மதுரைக்கருகில் அழகர்மலை, ஆனைமலை, திருப்பரங்குன்றமலை, திருவாதவூர், சமணமலை, நாகமலை (மதுரை காமராசர் பல்கலைக் கழக மலையின் மேற்குப் ப...

குட்டி இளவரசன்.

குட்டி இளவரசன் புத்தகத்திலிருந்து பிடித்த சில வரிகள். உனக்குத் தெரியுமா... என் மலர்... அவளுக்கு நான்தான் பொறுப்பாளி! அவள் எவ்வளவு பலவீன மானவள்! குழந்தைத்தனமானவளும்கூட. உலகத்தி டமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவளிடம் இருப்பவை ஒரு பயனுமற்ற நான்கு முட்கள்தான்." "உன் உலகத்து மனிதர்கள் ஒரே தோட்டத்தில் ஐயாயிரம் ரோஜாக்களை வளர்க்கிறார்கள்... அவற்றிடம் அவர்கள் தேடுவது கிடைப்பதில்லை..." என்றான் குட்டி இளவரசன். "அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை,” என்று பதில் அளித்தேன்... "ஆனால் அவர்கள் தேடுவது, ஒரே ஒரு ரோஜா வில் அல்லது சிறிதளவு தண்ணீரில் கிடைக்கிறது..." "நிச்சயமாக," என்றேன். “ஆனால் கண்களுக்குப் பார்வையில்லை. இதயத் தால் தேட வேண்டும்," என்று குட்டி இளவரசன் மேலும் தொடர்ந்து சொன்னான். திறந்த உதடுகளிலிருந்து ஒரு அரைகுறைப் புன்னகை தோன்றி மறைந்தது. மறுபடியும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்: “உறங்கும் இந்தக் குட்டி இளவரசனிடம் என் மனதை நெகிழச் செய்வது, மலரிடம் அவன் கொண்டுள்ள விசுவாசம். உறங்கிக் கொண்டிருக்கும்போதுகூட ஒரு ரோஜாவின் உருவம் விளக்கின் சுடர்போல் அவனிடம்...

காதல் ஓஷோ.

காதல் என்பது ஒரு விளையாட்டல்ல. அது ஒரு மகத்தான தீரச் செயல். அது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பொறுப்பு. அதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டால் அது ஒரு வாழ்நாளையும் தாண்டிப் பல வாழ்நாட்கள் தொடரும் ஓர் உறவு. இன்று யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதங்கள்தான் மேற்கத்திய சிந்தனையை மிகவும் பாதித்த மதங்கள். இந்த மூன்று மதங்களின் போதனைகளால் மறுபிறவி என்ற கோட்பாட்டையே நாம் இழந்துவிட்டோம். ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் இந்தப் பிறவியில் ஒருவரை ஆழமாகக் காதலித்தால் அடுத்தபிறவியிலும் அவரை நீங்கள் அவசியம் சந்திப்பீர்கள். பல பிறவிகளில் தொடரும் திருமண உறவைப் பற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படி இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்கிறார்கள். உங்கள் காதலே உங்கள் தியானமாக இருக்கட்டும். உங்கள் காதலைப் புனிதமான ஓர் உறவாகப் பாருங்கள். பொழுதுபோக்கு விஷயமாகப் பார்க்காதீர்கள். உங்கள் காதலை ஒரு சவாலாக எதிர்கொள்ளுங்கள். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வது ரணவேதனையாகத்தான் இருக்கும். வளர்ச்சி தேவை என்றால் வலியை அனுபவித்துத் தானாக வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்கு உங்கள் காதலை உங்கள்...

மகிழ்ச்சி ஓஷோ.

மகிழ்ச்சி மட்டுமே உண்மையான ரசவாதம் என்று ஏன் சொல்கிறேன்? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் ஆற்று வெள்ளத்தைப் போல் ஓடிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் சக்தி ஓர் இடத்தில் உறைந்து போகாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது. உங்களுக்குள்ளே பிரபஞ்சத்தின் சக்தி நடனமாடிக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கசக்திதான் உங்களை மாற்ற முடியும். நீங்கள் சோகமாக இருக்கும்போது ஒரு பாறாங்கல்லைப் போல் ஓர் இடத்தில் உறைந்து போகிறீர்கள். உங்களிடம் இயக்கம் இல்லை. ஓட்டம் இல்லை. அந்த நிலையில் நீங்கள் எப்படி மாற முடியும். சோகமாக இருக்காதீர்கள். கடவுளைத் தேடுபவர்களிடம் எல்லாம் இந்தப் பிரச்சினை இருக்கிறது. கடவுளைத் தேடுபவர்கள் எல்லாரும் அதற்காகக் கவலைப்படும் சீரியஸ் ஆசாமிகளாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு களமும் அழுத்தமும் இருக்கிறது. இந்தக் களமும் அழுத்தமும் இல்லாதவர்கள் கடவுளைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் கடவுளைத் தேடச் சரியான ஆசாமிகள் அவர்கள்தான். இந்த மனிதர்கள் - அதாவது எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள் - வாழ்க்கையை அனுபவிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை, காதல், உணவு. சுகங்கள் போன்ற சின்னச் ச...

தீபாவளி.

Image
  புகைப்படம் சமணர்களின் தீபாவளி. இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசியத் திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா, இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப்பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் ‘இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது. தமிழர் திருவிழா இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள். இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே...

ஓஷோவின் வாழ்விற்க்கான அறிவுரை.

இறைமை என்ற அந்த வார்த்தையை நீங்கள் மறந்துவிடலாம். அதனால் எந்த நஷ்டமும் இல்லை. வாழ்க்கை மட்டும் இருந்தாலே போதுமானது. வாழ்க்கை என்றால் அது மரணமில்லாப் பெரு வாழ்வு, ஏதோ முக்கியமான வாழ்க்கை ஆங்கிலத்தில் பெரிய L போட்டு எழுதும் Life என்று நினைத்துவிடாதீர்கள். சாதாரண, எளிமையான சந்தோஷமான சிறிய போட்டு எழுதும் life ஐத்தான் நாள் சொல்கிறேன். அந்த வாழ்க்கைதான் இறைமை. இது நான் தினமும் சந்திக்கும் பிரச்சினை. நீங்கள் மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன் துடிப்புடன் இருப்பதையே நாள் விரும்புகிறேன். பித்துப் பிடித்தவளைப் போல் வாழ்க்கையை வெறித்தளமாகக் காதலியுங்கள். இறைமையை அறிந்து கொள்ளும் ஓரே வழி அதுதான். வாழ்க்கையிலும் காதலிலும் உங்களைத் தொவைத்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் இறைமையைக் காண்பீர்கள். வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு களமான மனதுடன் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தால் அவரை ஒருநாளும் கண்டுபிடிக்க மாட்டீர்கள். ஏனென்றால் அந்த மனப்பாங்கோடு கடவுளை ஒருநாளும் அடைய முடியாது. நீங்கள் சோகமாக, கனமாக இருந்தால் கடவுளைத் தேட நீங்கள் சரியான ஆள் இல்லை. இறைமை உங்களைச் சந்திக்க விரும்பாது. இறைமைக்குச் சோகம் பிடிக்காது. இதுநாள்...

ஐயா காயிதேமில்லத்.

இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகச் செயல்பட்டார். அப்பொழுது எது தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த #காயிதே மில்லத் அவர்கள் இப்படிப் பேசினார் : "ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்பக் காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது, எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.  பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்: ( Part XIV A Languages - Page : 1471 to 1474 - Date 14th September 1949 - Vol : IX) *** தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்...