காதல் ஓஷோ.

காதல் என்பது ஒரு விளையாட்டல்ல. அது ஒரு மகத்தான தீரச் செயல். அது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பொறுப்பு. அதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டால் அது ஒரு வாழ்நாளையும் தாண்டிப் பல வாழ்நாட்கள் தொடரும் ஓர் உறவு.

இன்று யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதங்கள்தான் மேற்கத்திய சிந்தனையை மிகவும் பாதித்த மதங்கள். இந்த மூன்று மதங்களின் போதனைகளால் மறுபிறவி என்ற கோட்பாட்டையே நாம் இழந்துவிட்டோம். ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் இந்தப் பிறவியில் ஒருவரை ஆழமாகக் காதலித்தால் அடுத்தபிறவியிலும் அவரை நீங்கள் அவசியம் சந்திப்பீர்கள். பல பிறவிகளில் தொடரும் திருமண உறவைப் பற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படி இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்கிறார்கள்.

உங்கள் காதலே உங்கள் தியானமாக இருக்கட்டும். உங்கள் காதலைப் புனிதமான ஓர் உறவாகப் பாருங்கள். பொழுதுபோக்கு விஷயமாகப் பார்க்காதீர்கள். உங்கள் காதலை ஒரு சவாலாக எதிர்கொள்ளுங்கள். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வது ரணவேதனையாகத்தான் இருக்கும். வளர்ச்சி தேவை என்றால் வலியை அனுபவித்துத் தானாக வேண்டும்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு உங்கள் காதலை உங்கள் தியானமானப் பாருங்கள். இந்த உலகில் உங்கள் காதலரைத் தவிர வேறு யாருமே இல்லை என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆறுமாதங்களுக்குப் பின் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.