குட்டி இளவரசன்.

குட்டி இளவரசன் புத்தகத்திலிருந்து பிடித்த சில வரிகள்.

உனக்குத் தெரியுமா... என் மலர்... அவளுக்கு நான்தான் பொறுப்பாளி! அவள் எவ்வளவு பலவீன மானவள்! குழந்தைத்தனமானவளும்கூட. உலகத்தி டமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவளிடம் இருப்பவை ஒரு பயனுமற்ற நான்கு முட்கள்தான்."


"உன் உலகத்து மனிதர்கள் ஒரே தோட்டத்தில் ஐயாயிரம் ரோஜாக்களை வளர்க்கிறார்கள்... அவற்றிடம் அவர்கள் தேடுவது கிடைப்பதில்லை..." என்றான் குட்டி இளவரசன்.

"அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை,” என்று பதில் அளித்தேன்... "ஆனால் அவர்கள் தேடுவது, ஒரே ஒரு ரோஜா

வில் அல்லது சிறிதளவு தண்ணீரில் கிடைக்கிறது..."

"நிச்சயமாக," என்றேன்.

“ஆனால் கண்களுக்குப் பார்வையில்லை. இதயத் தால் தேட வேண்டும்," என்று குட்டி இளவரசன் மேலும் தொடர்ந்து சொன்னான்.

திறந்த உதடுகளிலிருந்து ஒரு அரைகுறைப் புன்னகை தோன்றி மறைந்தது. மறுபடியும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்: “உறங்கும் இந்தக் குட்டி இளவரசனிடம் என் மனதை நெகிழச் செய்வது, மலரிடம் அவன் கொண்டுள்ள விசுவாசம். உறங்கிக் கொண்டிருக்கும்போதுகூட ஒரு ரோஜாவின் உருவம் விளக்கின் சுடர்போல் அவனிடம் ஒளி வீசிக்கொண் டிருக்கிறது..." முன்னைவிட அவன் மேலும் மென்மை யாக இருந்ததை உணர்ந்தேன்.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.