மகிழ்ச்சி ஓஷோ.
மகிழ்ச்சி மட்டுமே உண்மையான ரசவாதம் என்று ஏன் சொல்கிறேன்?
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் ஆற்று வெள்ளத்தைப் போல் ஓடிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் சக்தி ஓர் இடத்தில் உறைந்து போகாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது. உங்களுக்குள்ளே பிரபஞ்சத்தின் சக்தி நடனமாடிக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கசக்திதான் உங்களை மாற்ற முடியும்.
நீங்கள் சோகமாக இருக்கும்போது ஒரு பாறாங்கல்லைப் போல் ஓர் இடத்தில் உறைந்து போகிறீர்கள். உங்களிடம் இயக்கம் இல்லை. ஓட்டம் இல்லை. அந்த நிலையில் நீங்கள் எப்படி மாற முடியும்.
சோகமாக இருக்காதீர்கள். கடவுளைத் தேடுபவர்களிடம் எல்லாம் இந்தப் பிரச்சினை இருக்கிறது. கடவுளைத் தேடுபவர்கள் எல்லாரும் அதற்காகக் கவலைப்படும் சீரியஸ் ஆசாமிகளாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு களமும் அழுத்தமும் இருக்கிறது. இந்தக் களமும் அழுத்தமும் இல்லாதவர்கள் கடவுளைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் கடவுளைத் தேடச் சரியான ஆசாமிகள் அவர்கள்தான். இந்த மனிதர்கள் - அதாவது எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள் - வாழ்க்கையை அனுபவிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை, காதல், உணவு. சுகங்கள் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை நன்றாக அனுபவிக்கிறார்கள். உலகத்திலிருந்து விலகி நிற்காமல் அதோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கோயிலுக்குப் போவதில்லை. ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் செல்வதில்லை. இதெல்லாம் கனமான விஷயங்கள். சாவோடு தொடர்புடையவை. வாழ்க்கைக்கும் கோயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும்.
Comments
Post a Comment