ஐயா காயிதேமில்லத்.
இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகச் செயல்பட்டார். அப்பொழுது எது தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த #காயிதே மில்லத் அவர்கள் இப்படிப் பேசினார் : "ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்பக் காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது, எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க
இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்: ( Part XIV A Languages - Page : 1471 to 1474 - Date 14th September 1949 - Vol : IX) ***
தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்குப் போய்ச் சேரும் என்கிற சூழல் நிலவிய பொழுது காமராஜர், "அவை இந்தியாவில் தானே இருக்கின்றன?" என்று சொல்லிவிட இவரோ நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்குக் கேரளாவில் தான் செல்வாக்கு அதிகம் என்று தெரிந்திருந்த பொழுதும் அஞ்சாமல், தேவிக்குளம், பீர்மேடு ஆகிய பகுதிகளைக் கேரளாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று இங்கே கேட்கிறார்கள். அவை எல்லையோர பகுதிகள். தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள். அங்கே அவர்கள் வந்துவிட்டுப் போகிறவர்கள் என்று அப்பகுதி அரசு சொல்கிறது. பின்னர் எவ்வாறு கடந்த தேர்தலில அவர்கள் அங்கே பெரும்பான்மையாக ஓட்டளித்தார்கள் என்று விளக்க முடியுமா? அப்பகுதி தமிழகத்தோடு தான் இணைக்கப்பட வேண்டும்!" என்று முழங்கினார்,
Comments
Post a Comment