கடவுளுக்கும் தெய்வத்துக்குமான வித்தியாசம் என்ன?
தெய்வம் கூட இருக்கிறது, உதவி பண்றது. கூட வர்றது.தெய்வம்கிற சொல் பழைய வேர்ச்சொல் தெய்யாட்டம்னு மலையாளத்துல ஒரு ஆட்டம் இருக்கு. தெய்வத்துக்கு ஆடுகிற ஆட்டம் ஆடியும், பாடியும் இயற்கை சார்ந்த, இயற்கையை மீறிய ஒன்றை வழிபட்டதுதான் தெய்வம்,
அரசுகள் உருவாக்கத்தின்போதுதான் மதங்கள் உருவாகுது. அப்ப அந்தத் தெய்வ வழிபாடுகள் எல்லாம் சேர்த்து மதமாக்குறான். சிவபெருமானே ஒரு Tribal chieftain. அதாவது பழங்குடியைச் சேர்ந்த குறுநிலத் தலைவன் அப்படிம்பாரு நாட்டார் வழக்காற்றியல் வகுப்பெடுத்த பேராசிரியர். சிவபெருமான் தலையில மாட்டுக் கொம்பு இருக்கு. ஊமத்தம் பூ இருக்கு,
ஒரு இனக்குழுத் தலைவன் தன்னை எப்படி அலங்கரித்துக் கொள்கிறானோ அந்த மாதிரிதான் இருக்கு. அரப்பால இருந்த பசுபதி வழிபாடும் அப்படித்தான் என்பார் பாண்டு என்னும் நாட்டுப்புற ஆய்வாளர்.
-பேரா.தொ.ப
Comments
Post a Comment