இந்து தர்மம்." (குரு கோல்வாக்கர் எழுதிய 'Bunch of thoughts' நூல் பக்கம் 138 - 13
அவர்கள் கூறும் இந்து ராஷ்டிரம்' என்பது பார்ப்பன ராஷ்டிரம் தான் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சுட்டிக் காட்ட கும்வும். ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வேத நூல் என்று அவர்களால் போற்றப்படும் ஒரு நூலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் எழுதியிருக்கிறார்!
இந்து ராஷ்டிரம்' என்றால் அது எப்படிப்பட்ட சமூக அமைப்பைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்கு பழையகால நிகழ்ச்சி ஒன்றை பெருமையோடு எடுத்துக்காட்டி இதுதான் "இந்து ராஷ்டிரம்" என்று மார்தட்டிக் கொள்கிறார்!
கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன? இதோ படியுங்கள்.
"தென்னாட்டில் ஒரு ஆங்கிலேயே அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேயே அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது பிராமண பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேயே அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமணப் பியூனைப் பார்த்தவுடன் காலைத் தொட்டு வணங்கினார். அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கிலேயே அதிகாரி "நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின்காலைத்தொட்டு கும்பிடுகிறாயே இது என்ன பிரச்சினை?" என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருமிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம்; ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை, என்று பதில் சொன்னார் இதுதான்
இந்து தர்மம்." (குரு கோல்வாக்கர் எழுதிய 'Bunch of thoughts' நூல் பக்கம் 138 - 13
ஒரு பியூனாக இருந்தாலும் அவன் பார்ப்பானாக இருந்தால் அவனது காலை, பெரிய அதிகாரிகளே தொட்டு வணங்க வேண்டும் என்பதைத்தான் இந்து ராஷ்டிரத்தின் நோக்கம்.
இந்தக் கூட்டத்தின் வழிபாட்டுப் பாடல் என்ன தெரியுமா? அந்தப் பாடல்களில் வரும் வரிகள்.
"Salutations to you, O, Mother Land where I am borm; Salutatious to you, O, Land of Aryas, Where I have grown; Salutations to you, o, sacred land where I have worked.
"நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன். என்னை வளர்த்த ஆரிய நாடே, உன்னை வணங்குகிறேன். நான் உழைக்கும் புண்ணிய நாடே உன்னை வணங்குகிறேன்
இதுதான் 1939 ஆம் ஆண்டுவரை இந்தியிலும் மராத்தியிலும் இவர்கள் பாடிய பிரார்த்தனை பாடல்.
Comments
Post a Comment