Posts

Showing posts from September, 2022

தமிழிசை.

பழந்தமிழ்ப் பண்ணிசை என்பது யாது? நம் தமிழ்மொழியினைப் போல.தமிழிசையென்பது நம்முடைய மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது (அ) இயற்றமிழ், (ஆ) இசைத்தமிழ், (இ) நாடகத்தமிழென மூன்று வகையினதாய் தழைத்தோங்கி இருந்தமைக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று தமிழைத் வெறும் ஏட்டளவிலேயே அறிந்திருக்கின்றனர் என்று தமிழிசையின் மறுவடிவம் என்று நிலைநாட்டக் கூடிய அளவிற்கு இந்த ஒற்றுமைகளும், தமிழிசையின் பழமையும், இலக்கிய ஆதாரங்களும் தாய்மொழியாய் கொண்டவரில் கையளவினரே தமிழிசை என்று ஒன்று இருந்தமையை அதுவும் சொன்னால் அது மிகையான வழக்கல்ல. இன்றைக்கு கர்நாடக சங்கீதம் என்று வழங்கப்படும் இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இன்று தழைத்தோங்கி இருக்கும் கர்நாடக இசையேஆராய்ச்சியாளர்களுக்கு உதவக்கூடும். இன்றைக்கு நமக்கு புரியும் வகையில், தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் தமிழிசை பற்றிய பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழிசையும் கர்நாடக இசையும்: இற்றைக்குக் கிடைக்கின்ற ஆதாரங்களை நோக்குங்கால், இன்று செழித்தோங்கி இருக்கும் கர்நாடக இசையின...

ஜென் கவிதைகள்!

எனக்கு பிடித்த ஜென் கவிதைகள்.  பனித்துளியே! உன் புனித நீரில் கழுவிக் கொள்கிறேன் இந்த வாழ்க்கையின் கறுப்புக் கைகளை பாஷோ வாழ்க்கை! அசைந்தாடும் புல்லின்மேல் வண்ணத்துப் பூச்சி.. அவ்வளவுதான் ஆனால் எத்தனை அழகு! ஸோயின்.      முட்டாள் வயற்காட்டுப் பொம்மையே! உன் குச்சிக் காலடியிலேயே கதிரைத் திருடும் பறவைகள். தாயூ.     அரசனுக்குக் கூட தொப்பி எடுத்து வணங்குவதில்லை வயற்காட்டுப் பொம்மை  டான்சூய்  பனி விழும் காலை நான் வெறுத்த அக் கருங்காக்கை அடடே! என்ன அழகு !   பாஷோ முதுமை அடையக் கூடாதென்று முடிவு செய்தேன்.. அதோ கேள்! புத்தாண்டு மணியோசை! ஜோகுன்  மலையருவிக் கற்களும் கூடக் கவி பாடும் காட்டு மலர்களுக்காக. ஓனிட்சுரா  குரல் மட்டும் இல்லையென்றால் காலைப் பனியில் காணாமல் போயிருக்கும் வெள்ளை நாரைகள் சியோ  குழந்தையில்லா மனையாள் எத்தனை மெதுவாய்த் தொடுகிறாள்! விற்பனைப் பொம்மைகளை. ரான்செட்சு  நீரில் படிந்த நிலவு மீண்டும் மீண்டும் உடைந்தாலும்.. திடமான முத்திரைதான் சோசு  பார வண்டி சப்தத்தில் அதிர்ந்தது சாலை. விழித்தது ஒற்றை வண்ணத்துப் பூச்சி...

சந்திரமதி

  பச்சைக் குழந்தை யடி! - கண்ணிற் பாவை யடி சந்திரமதி! இச்சைக் கினிய மது; - என்றன் இருவிழிக்குத் தேனிலவு: நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே - நல்ல நாகமணி யுள்ளதென்பார்; துச்சப்படு நெஞ்சிலே - நின்தன் சோதி வளருதடீ! (1) பேச்சுக் கிடமே தடி! - நீ பெண்குலத்தின் வெற்றி யடி! ஆச்சர்ய மாயை யடி! - என்தன் ஆசைக் குமாரி யடி! நீச்சு நிலை கடந்த - வெள்ள நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல், தீச்சுடரை வென்ற வொளி - கொண்ட தேவி! நினை விழந்தேனடி! (2) நீலக் கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி! கோல மதியினி லே-நின்தன் குளிர்ந்த முகங் காணுதடி! ஞால வெளியினிலே-நின்தன் ஞான வொளி வீசுதடி! கால நடையினிலே - நின்றன் காதல் விளங்குதடி! (3) மகாகவி பாரதியார்

அழகுத் தெய்வம்

Image
  மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன், வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை; பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும். புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம், துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து, தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள். அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா! அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்.  "யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?" என்றேன்; "யோகமே தவம், தவமே யோக" மென உரைத்தாள். "ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?"என்றேன்; "இரண்டுமாம், ஒன்று மாம், யாவுமாம்"என்றாள். "தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?" "தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?" என்றேன். "வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ?" என்றாள்.  "காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ"என்றேன். "காலமே மதியினுக்கோர் கருவியாம்" என்றாள். “ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?"என்றேன்; "நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்” என்றாள் "ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?” என்றேன்; “எண்ணினால் எண்ணியது நண்ணுங்க...

கம்பர் வர்ணனை.

 மிதிலைக்காட்சி, 33) கவிச்சக்கரவர்த்தி கம்பர். காண்கின்ற கண்களுக்கு ஒரு திருவிழாவைப்போல் பெரு மகிழ்ச்சிக்கு இடமான கட்டழகிகளும் சீதையைக்காண்பாயின் உள்ளம் களித்து உயிர் உருகி நிற்பர்; ஆகவே அழகிய மங்கையர்க்கு ஓர் இனிய அமுதமாய் அவள் தனியமைத்துள்ளாள்; ஒத்த பெண்களுக்கே இவ்வாறாயின், எங்கள் நாயகனான இராமபிரான் கண்டால் இனி யாது நிகழுமோ? பிறருடைய உள்ளங்களைக் கொள்ளைகொள்ள வல்ல பேரழகி களும் சீதையைக் கண்டு உள்ளம் பறிபோய் உயிருருகி நின்றார் என்றது அப்பிராட்டியின் அற்புத அழகை ஒருவாறு உணர்ந்து கொள்ள ஓரளவு கூறியபடியாம். https://arattai.quora.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-33-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE...

வசியம் செய்யும் வல்லிசை.

  இசை எப்படியெல்லாம் வசியம் செய்யும் என்றால், இசையால் யானையைக்கூட மதி மயங்கச் செய்ய முடியும் என்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மிக அழகாகக் கூறி இருப்பார்..  "அமைவிளை தேறல் மாந்திய கானவன் கவண்விடு புடையூஉக் காவல் கைவிட வீங்குபுன முணீஇய வேண்டி வந்த வோங்கியல் யானை தாங்குதுயி லெய்த வாகை தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கெனத் திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்"  என்ன அர்த்தம் எனில், நெல் விளைச்சல் காய்த்துக் குலுங்கும்போது அதைக் காவல் காக்கவேண்டிய கானவன் காவல்காரன் அங்கிருந்த மூங்கிலில் விளைந்த மதுவை அருந்திவிட்டு மதி மயங்கிக் கிடந்தானாம்.. அந்த நேரம் பார்த்து யானைக்கூட்டம் கதிரைத் தின்ன வந்ததாம்.. யானைக்கூட்டம் புகுந்தால் என்ன ஆவது? இதைக்கண்ட குறத்தியர்கள் உடனே தங்களுடைய நாட்டுப்புறப் பாடலான குறிஞ்சிப்பண் பாடல்களை ராகத்தோடு இசைக்க யானைகள் இளைப்பாறி உறங்கும் நிலைக்கு, மயக்க நிலைக்குச் சென்றனவாம். யானையையே கட்டிப்போடக் கூடிய ஆற்றல் இசைக்கு உண்டு என்பதை இவ்வாறு இளங்கோவடிகள் காட்சிப்படுத்தியிருப்பார்.

திருமுறை கண்ட சோழன்.

  ராஜராஜ சோழன் ஒரு நாள் நிசும்ப சூதனி கோயிலுக்குச் செல்கிறார். இன்றும் இந்தக் கோயில் தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலையத்திற்கு அருகில் படைவெட்டி மாரியம்மன் கோயில் எனும் பெயரில் உள்ளது. அங்குள்ள துர்க்கை உக்கிர வடிவத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலானது, விஜயாலய சோழனால் கட்டப்பட்ட சோழர்களின் பூர்வீகக் கோயில் ஆகும். குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே! ஞானியர்கள், பக்திமான்கள், அருளாளர்கள், மனிதப் பிறவியே வேண்டாம். இறை நெறியோடு கலந்துபோக வேண்டுமென்றுதான் நினைப்பார்கள். ஆனால், ஒரே ஒரு காரணத்திற்காவது மனிதனாக பிறக்க வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர்! எதற்காக? தில்லை அம்பலத்தில் ஆடுகிற ஆடல் வல்லாளன் நடராஜனுடைய பொற்பாதங்களைக் காண்பதற்காகவே மனித பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்று பாடுகிறார்.பாடலைக் கேட்டு மெய்மறந்த ராஜராஜன், இது என்ன பாட்டு? இதை யார் இயற்றியது என்று கேட்கிறார். இந்தப் பாடல் சிவனைப் போற்றிப் பாடுகின்ற தேவாரம...