ஜென் கவிதைகள்!
எனக்கு பிடித்த ஜென் கவிதைகள்.
பனித்துளியே! உன் புனித நீரில்
கழுவிக் கொள்கிறேன்
இந்த வாழ்க்கையின் கறுப்புக் கைகளை
பாஷோ
வாழ்க்கை! அசைந்தாடும் புல்லின்மேல்
வண்ணத்துப் பூச்சி.. அவ்வளவுதான்
ஆனால் எத்தனை அழகு!
ஸோயின்.
முட்டாள் வயற்காட்டுப் பொம்மையே! உன் குச்சிக் காலடியிலேயே கதிரைத் திருடும் பறவைகள்.
தாயூ.
அரசனுக்குக் கூட
தொப்பி எடுத்து வணங்குவதில்லை
வயற்காட்டுப் பொம்மை
டான்சூய்
பனி விழும் காலை
நான் வெறுத்த அக் கருங்காக்கை அடடே! என்ன அழகு !
பாஷோ
முதுமை அடையக் கூடாதென்று
முடிவு செய்தேன்..
அதோ கேள்! புத்தாண்டு மணியோசை!
ஜோகுன்
மலையருவிக் கற்களும் கூடக் கவி பாடும்
காட்டு மலர்களுக்காக.
ஓனிட்சுரா
குரல் மட்டும் இல்லையென்றால் காலைப் பனியில் காணாமல் போயிருக்கும் வெள்ளை நாரைகள்
சியோ
குழந்தையில்லா மனையாள்
எத்தனை மெதுவாய்த் தொடுகிறாள்!
விற்பனைப் பொம்மைகளை.
ரான்செட்சு
நீரில் படிந்த நிலவு மீண்டும் மீண்டும் உடைந்தாலும்..
திடமான முத்திரைதான்
சோசு
பார வண்டி சப்தத்தில் அதிர்ந்தது சாலை. விழித்தது ஒற்றை வண்ணத்துப் பூச்சி.
ஷோஹா
நீரில் மிதக்கும் நாரை
கலையும் வரை கொத்தும்
நிலாப் பிம்பத்தை.
ஜூயிர்யூ
என் நிலத்தை விற்ற அந்த இரவில் உறங்கவே இல்லை
தவளைகள் அழைப்பால்
ஹோகுஷி
Comments
Post a Comment