கம்பர் வர்ணனை.
மிதிலைக்காட்சி, 33) கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
காண்கின்ற கண்களுக்கு ஒரு திருவிழாவைப்போல் பெரு மகிழ்ச்சிக்கு இடமான கட்டழகிகளும் சீதையைக்காண்பாயின் உள்ளம் களித்து உயிர் உருகி நிற்பர்; ஆகவே அழகிய மங்கையர்க்கு ஓர் இனிய அமுதமாய் அவள் தனியமைத்துள்ளாள்; ஒத்த பெண்களுக்கே இவ்வாறாயின், எங்கள் நாயகனான இராமபிரான் கண்டால் இனி யாது நிகழுமோ?
பிறருடைய உள்ளங்களைக் கொள்ளைகொள்ள வல்ல பேரழகி களும் சீதையைக் கண்டு உள்ளம் பறிபோய் உயிருருகி நின்றார் என்றது அப்பிராட்டியின் அற்புத அழகை ஒருவாறு உணர்ந்து கொள்ள ஓரளவு கூறியபடியாம்.
Comments
Post a Comment