சந்திரமதி
பச்சைக் குழந்தை யடி! - கண்ணிற் பாவை யடி சந்திரமதி! இச்சைக் கினிய மது; - என்றன் இருவிழிக்குத் தேனிலவு: நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே - நல்ல நாகமணி யுள்ளதென்பார்; துச்சப்படு நெஞ்சிலே - நின்தன் சோதி வளருதடீ! (1)
பேச்சுக் கிடமே தடி! - நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி! - என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த - வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல், தீச்சுடரை வென்ற வொளி - கொண்ட தேவி! நினை விழந்தேனடி! (2)
நீலக் கடலினிலே நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி! கோல மதியினி லே-நின்தன் குளிர்ந்த முகங் காணுதடி! ஞால வெளியினிலே-நின்தன் ஞான வொளி வீசுதடி! கால நடையினிலே - நின்றன் காதல் விளங்குதடி! (3)
மகாகவி பாரதியார்
Comments
Post a Comment