Posts

Showing posts from June, 2021

ஆகாயத்தின் பெயர்.

Image
 ஆகாயத்தின் பெயர். வேணி, விசும்பு, வெளி, உம்பர், இடம், வானம், கோ, விண், மண்டிலம், ஆசினி,மீ, மாசம், கம், வியோமம், புட்கரம், வான், ககனம், நாகம், மங்குல், குண்டலம், அண்டம், உலகம், அம்பரம், குழை, குடில், அந்தரம், அகலம். வெளியின் பெயர். வெடி, வயல், வெள்ளிடை, விடியல். பகிரண்டத்தின் பெயர். அண்டாண்டம். அண்டகோளகையின் பெயர். கூடம், கடாகம். அண்டமுகட்டின் பெயர். மூதண்டம். அண்டச்சுவரின் பெயர்.  பித்திகை.

இந்த நிலை மாறிவிடும்.

Image
இந்த நிலை மாறிவிடும். 1945-ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கமயூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன்பொரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவரது தரப்புநியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறுவழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சாலாந்தில் அடைக்கலமானார் சாப்ளின். 1972... காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு. 'உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்' விருது பெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக்கொண்டாலும் அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி மீண்டும் சுவிட்சர்லாந்து கிளம்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படிஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?" எனக் கேட்டார்கள். சாபளின் சிரித்தார்... --இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி. துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும்கூட!" வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞனின் அந்த மந்திரச் சொல்.

அழிக்க முடியாதவர்கள்.

 அழிக்க முடியாதவர்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு, குறிக்கோள், தொழில் நுட்பச்சிறப்பறிவுத் திறமை ஆகியவற்றிற்காக எனக்கு அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் மதிப்பார்வமிக்க பாராட்டும் உண்டு. தமிழ் மக்களின் உணர்ச்சி வெளிப்பாடு தான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்றஎண்ணப்பதிவே என்னுள் மிஞ்சியிருந்தது. அந்தத் தமிழ் உணர்ச்சிக்கனிவும், ஆர்வகொள்கையும் இருக்கும் காலம் வரை அவர்களை அழிக்க முடியாது. ஜெனரல் S.C சர்டேஷ் பாண்டே (தளபதி இந்திய அமைதிகாக்கும் படை 1992)

பெறுமதிமிக்க உயிர்..

 பெறுமதிமிக்க உயிர் திரு பிரபாகரன் ஒரு சாதாரண மனிதரல்ல. உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்புமிக்கதும் பலமான விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர். அவருடைய உயிர் பெறுமதிமிக்கது. அவருக்குப் பின்னால் எந்தவித கறையும் கிடையாது. மிகவும் எளிமையான மனிதர்.அவருடைய மனைவியிடம் மூன்று புடவைகள் மாத்திரமே இருந்தன. ஒன்று அணிந்து அழுக்கானதாக இருக்கும்.இன்னொன்று தோய்த்து அணிவதற்குத் தயாராக இருக்கும். ஒன்றை அவர் அணிந்திருப்பார். விருந்தினர்களுக்கு மாத்திரம் கொக்கோ கோலாபோன்ற மென்பானங்களை அருந்தத்கொடுப்பார்கள். தாங்கள் சாதாரண சோடா வகைகளையே அருந்துவார்கள். மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங். (தளபதி இந்திய அமைதிகாக்கும் படை)
   மிர்தாதின் புத்தகம் பற்றி ஓஷோ உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால்,இன்றுள்ள எல்லாப் புத்தகங்களையும் விட, மேலோங்கி உயர்ந்து நிற்பது 'மிர்தாதின் புத்தகம்' மட்டுமே. மிர்தாதின் புத்தகத்தை மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள் என்பது இரங்கத்தக்க நிலைதான். அதற்கான எளிய காரணம், அது, ஒரு மதத்தின் வேதப் புத்தகமாக இல்லாமல் இருப்பதுதான். அது ஒரு நீதிநூல், ஒரு புதினம். ஆனால், அதற்குள் கடலளவு உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அது ஒரு சின்னப் புத்தகம்தான். ஆனால், அதைப் பெற்றெடுத்த மனிதர்... என் சொற்களைக் கவனியுங்கள், எழுதிய என்ற நான் சொல்லவில்லை. யாரும் அதை எழுதவில்லை. அதைப் பெற்றெடுத்த மனிதர்' என்றே நான் குறிப்பிடுகிறேன். அவரை அறிந்தவர் யாரும் இல்லை. அவரும் யாருமில்லை. அவர் நாவலாசிரியராக அல்லாமற் போனதால் அவர் மறுபடியும் எழுதவில்லை. தமது முழு அனுபவங்களையும் உள்ளடக்கிய அந்த ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே அவர் படைத்திருக்கிறார். அந்த மனிதரின் பெயர் மிகெய்ல் நைமி. அது ஒரு மேன்மை படைத்த புத்தகம். என்ன பொருளில் இப்படிச் சொல்கிறேன் என்றால், அதை நீங்கள் படித்ததுமே,அதை நீங்கள் சுத்தமாக இழந்து வி...

நவீன தமிழகத்தின் சிற்பி பெருந்தலைவர் காமராஜர்.

  காமராஜர் ஆட்சியின் சாதனைகள்.  காமராஜர் ஆட்சியின் சாதனைகள். 1. நெய்வேலி நிலக்கரித் திட்டம். 2. பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, 3. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், திருச்சி. 4. கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, ஊட்டி, 5. கனரக தொழிற்சாலை, ஆவடி, 6. அணுமின் நிலையம், கல்பாக்கம், 7. டெலிபிரிண்டர் தொழிற்சாலை, கிண்டி. 8. இந்தியா சிமென்ட்ஸ், சங்ககிரி. 9. காகிதத் தொழிற்சாலை, மேட்டூர். 10. அறுவைசிகிச்சை கருவித் தொழிற்சாலை, கிண்டி, 11. துப்பாக்கித் தொழிற்சாலை, திருச்சி, 12, இரும்பு உருக்காலை, சேலம், 13. லகு ரக ஸ்டீல் தொழிற்சாலை, அரக்கோணம், காமராஜர் பொறுப்பேற்றபோது தமிழகத்தில் புகலூர், நெல்லிக்குப்பம், பாண்டியராஜபுரம் ஆகியமூன்றுஇடங்களில் மட்டுமே சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன.காமராஜர் காலத்தில் சர்க்கரை ஆலையின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது.  இதைத் தவிர நூல் நூற்பு ஆலை, நெய்யும் பாவுத் தொழில், மிதி வண்டித் தொழிற்சாலை,உரத் தொழிற்சாலை, சோடா உற்பத்தி தொழிற்சாலை,தோல் பதனிடும் தொழிற்சாலை, ரப்பர் தொழிற்சாலை,காகித உற்பத்தி ஆலை, அலுமினிய உற்பத்தி ஆலைபோன்றவை தொடங்கப்பட்டன. தொழிற்பேட்டைகள் அமைக்கவும் காமராஜர...
 அயோத்திராமன் அழுகிறான் கங்கை காவிரி இணைக்க வேண்டும் கரசேவகரே வருவீரா? காடுகள் மலைகள் திருத்த வேண்டும் கரசேவகரே வருவீரா? வறுமைக்கோட்டை அழிக்க வேண்டும் கரசேவகரே வருவீரா? மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள் நாம் உடைக்கவே பிறந்தவர்கள் படைப்பதற்கில்லை வித்துண்ணும் பறவைகள் விதைப்பதில்லை விளைந்த கேடு வெட்கக் கேடு சுதந்திர இந்தியா ஐம்பதாண்டு உயரத்தில் அடிமை இந்தியன் ஐந்நூறாண்டுப் பள்ளத்தில் ஏ நாடாளுமன்றமே வறுமைக் கோட்டின்கீழ் நாற்பது கோடி மக்கள் என்றாய் அறிவுக் கோட்டின்கீழ் அறுபது கோடி அதை மட்டும் ஏன் அறிவிக்க மறந்தாய்? மதம் ஒரு பிரமை மதம் ஓர் அருவம் அருவத்தோடு என்ன ஆயுதயுத்தம்? மதம் என்பதொரு வாழ்க்கைமுறை வன்முறை என்பது எந்த முறை? அந்தக் கட்டடத்தின் மீதெப்போது கடப்பாரை வீழ்ந்ததோ அப்போது முதல் சரயூ நதி உப்புக்கரித்துக் கொண்டே ஒடுகிறது சீதை சிறைப்பட்டபின் இப்போதுதான் ராமன் இரண்டாம் முறை அழுகிறான் மாண்புமிகு மதவாதிகளே சில கேள்விகள் கேட்பேன் செவி தருவீரா? அயோத்திராமன் அவதாரமா? மனிதனா? அயோத்திராமன் அவதாரமெனில் அவன் பிறப்புமற்றவன் இறப்புமற்றவன் பிறவாதவனுக்கா பிறப்பிடம் தேடுவீர்? அயோத்திராமன் மனிதன்த...
  அறிவு எப்படி நம்மில் வளர்ந்தது என்று கவனித்துப் பார்த்தால்,உயிர் வாழும் தேவைதான் முதன்மையாக இருந்திருக்கிறது. ஆறு கோடி வருஷங்களுக்கு முன்னால், மனிதர்களின் ஆரம்பஅடையாளங்கள் கொண்ட 'ப்ரோஸிமியன் என்கிறவர்க்கத்துக்கு, கண் பார்வைதான் தீர்க்கமாக இருந்தது. நாலுகோடி வருஷத்துக்கு முன், நாலுகாலில் நடப்பதுதான்புத்திசாலித்தனம்!ஒன்றரைக் கோடி வருஷம் முன்னால், 'ராமா பித்திக்கஸ்'என்கிற ஆதி மனிதன் நிற்க ஆரம்பித்தான்; கையில் குச்சிவைத்துக்காண்டு விரட்ட ஆரம்பித்தான்.லட்சம்வருடங்களுக்குமுன் 'ஆஸ்திரேலியோ பித்திக்கஸ்' மனிதன்கல்லைத் தீட்டி ஆயுதங்கள் செய்தான்.லட்சம்வருஷங்களுக்கு முன்னால், ஹோமோரெக்டஸ் என்னும்மனிதன் மூட்டக் கற்றுக்கொண்டான். 'ஹோமொஸேப்பியன்ஸ்' 40 ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு பலவகைஆயுதங்கள் செய்யக் கற்றுக்கொண்டான். வேட்டையாட, இரைதேட, பரிணாம வழியில் அறிவு வளர வளர, மூளையின் அறிவும்அதிகமாகிக்கொண்டு வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். சுமார் 450 மில்லியிலிருந்து ஒன்றரை லிட்டருக்கு மூளையின்சைஸில் வளர்ந்திருக்கிறோம். (உள்ளடக்கத்தில் சிலர்இன்னமும் 'ஆஸ்திரேலியோ பித்திக் கஸா...

விடுதலைப் புலிகள் என ஏன் பெயரிட்டேன் தலைவர் பிரபாகரன்.

Image
  தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச் சின்ன மானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால் தான் இயக்கத்திற்கு "விடுதலைப் புலிகள்" என்று பெயரிட்டேன். புலிச் சின்னமானது தமிழ்த் தேசியத்தின்புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கொரில்லா யுத்த முறையையும் புலிச் சின்னம் குறித்து நிற்கிறது.     -மேதகு