அறிவு எப்படி நம்மில் வளர்ந்தது என்று கவனித்துப் பார்த்தால்,உயிர் வாழும் தேவைதான் முதன்மையாக இருந்திருக்கிறது.
ஆறு கோடி வருஷங்களுக்கு முன்னால், மனிதர்களின் ஆரம்பஅடையாளங்கள் கொண்ட 'ப்ரோஸிமியன் என்கிறவர்க்கத்துக்கு, கண் பார்வைதான் தீர்க்கமாக இருந்தது. நாலுகோடி வருஷத்துக்கு முன், நாலுகாலில் நடப்பதுதான்புத்திசாலித்தனம்!ஒன்றரைக் கோடி வருஷம் முன்னால், 'ராமா பித்திக்கஸ்'என்கிற ஆதி மனிதன் நிற்க ஆரம்பித்தான்; கையில் குச்சிவைத்துக்காண்டு விரட்ட ஆரம்பித்தான்.லட்சம்வருடங்களுக்குமுன் 'ஆஸ்திரேலியோ பித்திக்கஸ்' மனிதன்கல்லைத் தீட்டி ஆயுதங்கள் செய்தான்.லட்சம்வருஷங்களுக்கு முன்னால், ஹோமோரெக்டஸ் என்னும்மனிதன் மூட்டக் கற்றுக்கொண்டான். 'ஹோமொஸேப்பியன்ஸ்' 40 ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு பலவகைஆயுதங்கள் செய்யக் கற்றுக்கொண்டான். வேட்டையாட, இரைதேட, பரிணாம வழியில் அறிவு வளர வளர, மூளையின் அறிவும்அதிகமாகிக்கொண்டு வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
சுமார் 450 மில்லியிலிருந்து ஒன்றரை லிட்டருக்கு மூளையின்சைஸில் வளர்ந்திருக்கிறோம். (உள்ளடக்கத்தில் சிலர்இன்னமும் 'ஆஸ்திரேலியோ பித்திக் கஸாக இருப்பது வேறுவிஷயம்!) நாளைய மனிதனின் மூளை சைஸ் அதிகமாகலாம்என்று சொல்கிறார்கள். மூளை அதிகமாகிறதோ இல்லையோ,அறிவு அதிகமாகிறது.
இன்றைய தினம் நம் குழந்தைகளுக்கு
நம்மைவிட அதிகம் தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு 'ரிமோட்கன்ட்ரோல், டெலிபோன், எஸ்.டீ.டி, ஜெனட்டிக் கோடு, மைக்ரோகம்ப்யூட்டர்' போன்ற வார்த்தைகள் தெரிந்திருக்கின்றன.விடியோ கான்ஃபரன்ஸிங் ஸெல்லுலர், ஸாட்டிலைட், டிஷ்போன்றவையெல்லாம் நாளைய குழந்தைகள் சாதாரணமாகப்பயன்படுத்தக்கூடிய சொற்கள். இவை அனைத்தையும் கிளறிப்பார்த்தால், அறிவின் வளர்ச்சியில் சூழ் நிலையுடன் சமரசம்பண்ணிக்கொள்வது தான் பிரதானமாக இருப்பதைக்கவனிக்கலாம். ஆதிமனிதனுக்கு ஆபத்திலிருந்து தப்பிக்க கண்பார்வை தீர்க்கமாகவும், வேட்டையாட ஆயுதங்களும் தேவையாகஇருந்தபோது அந்த அறிவு விருத்தியானது. இன்று வேட்டையாட வேண்டாம்;பார்வைக்குலென்ஸும்,வேட்டையாட ரெஃப்ரிஜெரேட்டரும் கண்டுபிடித்துள்ளான்.
இன்றைக்கும் ஆதிமனித அடையாளங்கள் சில நம்மில் பாக்கியுள்ளன. உதாரணமாக, நம் கண் 'ரெட்டினா' திரையில்இயக்கத்தை, சலனத்தைக் கண்டு உணர்ந்து கொள்ளவென்றே)தனிப்பட்ட நியூரான்கள் இருக்கின்றன. இது ஆதிமனித தேவை.
பாப்பாவுக்கு அம்மாவின் வயிற்றிலும், பிறந்த பின் முதல்ஐந்து வருஷங்களிலும் உடலின் மற்ற அங்கங்களைவிட, மூளைஅபார வேகத்தில் வளர்கிறது. கரு மூன்று வாரம் மூன்றுமில்லிமீட்டர் சைஸ் இருக் கும்போதே, மூளையின் ஆரம்பஅடையாளங்கள் இரண்டு மாசக் கருவின் சைஸில் பாதிதலைதான். அடுத்த ஆறு மாதங்களில் அதன் எடை இருமடங்காகிறது. அந்த வயசில், பெரியவர்கள் சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது. மூளையில் உள்ள நியூரான்களும் பிறக்கிற சமயத்தில், கைவசம் அனைத்தும் கிடைத்துவிடுகின்றன.
இந்த நியூரான்கள் ஒன்றுக்கொன்று இணைந்து கொள்ளும்வலைப்பின்னல்தான் பாக்கி!அதுதான் அறிவு. அதுதான்வாழ்க்கையின் சாரமே! பிறந்ததிலிருந்து, முக்கியமாக நம்மூளையின் விருத்திக்குப் பயன் படுவது கண்பார்வையே!பிறந்ததும் எல்லாமே கன்ஃப்யூஷன்... அம்மாவின்அரவணைப்பைத் தவிர! ஆனால், மூன்று மாதங்களில்பாப்பாவுக்கு கலர் தெரிகிறது. பழுப்பு பேப்பரையும் பச்சைபேப்பரையும் வைத்தால், பச்சையைத் தேர்ந்தெடுக்கும். ஆறுமாதங்களில் அதற்கு சைஸ் தெரிகிறது. அருகில் உள்ள சிறியபொம்மையையும், தூரத்தில் இருக்கும் பெரிய பொம்மையும்பார்த்தால், அருகாமை பொம்மையைத் தேர்ந்தெடுக்கும். சதுரம்,வட்டம் போன்ற வடிவங்களையும் தீர்மானிக்க முடிகிறது.இரண்டு வயசுக் குழந்தையிடம் சதுரம், வட்டம், முக்கோணம்என்று பொந்துகளில் அந்தந்தவடிவுள்ள கட்டைகளைப்பொருத்தச் சொன்னால், பிடிவாதமாக ஒரே பொந்தில் திணிக்கப்பார்க்கும். ஆனால், இரண்டரை வயசில் ஒரு பொந்தில் முயன்றுபார்த்துவிட்டு, அடுத்ததை முயற்சிக்கும். மூன்று வயசில்சதுரத்தை சதுரத்திலும், முக்கோணத்தை முக்கோணத்திலும்தான் முதன்முதலே பொருத்திப் பார்க்கும். வேகமான வளர்ச்சி!
ஆறு மாதத்தில் முகம் பார்க்கும். ஷேப் தெரியும். ஒரு வயசில் வார்த்தைகள் பேசும். இரண்டு வயசில் தன் பேர் தெரியும்,இரண்டரையில், பேச்சைவிட அதிக வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும், தான் ஆணா பெண்ணா என்பது தெரியும். நாலுவயசுக்குள் சுற்றுப்புறத்தில் இல்லா அந்நிய வஸ்துக்களை வார்த்தைகள் மூலம் குறிப்பிட இயலும். மூன்று வயதுக்குத் தன்வயசு தெரியும். நாலு வயதுக்கு முழு வாக்கியங்களில் பேசும்திறமை. நேற்று, இன்று, நாளை போன்ற வார்த்தைகளின்பிரயோகம். அஞ்சு வயசுக்கு 15 வரையாவது எண்ணத் தெரியும்.
படிக்க ஆரம்பிக்கலாம். கடிதம்கூட எழுதலாம். ஆறு வயசுக்கு 30வரையாவது எண்ணி, வலது, இடது போன்ற வார்த்தைகள்....முழு வாக்கியங்கள் எழுதுவது; ஏழு வயசுக்கு கடிகாரத்தில் மணிசொல்லத் தெரியும், தன் பிறந்த நாள் தெரியும். எட்டு வயசுக்கு கணக்குப் போடும் திறமை உருவாகும். படமில்லாத புத்தகங்கள் வாசிக்க விருப்பம். ஒன்பது வயசுக்கு கனம் என்பதன் பரிமாணம் புரிய, பத்துவயசில் மனக் கணக்குகள்... பதினொன்றில்தர்க்கவாதங்கள்... பன்னிரண்டில் காலத்தைப் பற்றிய தெளிவு,காரண காரியங்கள், விவாதங்கள் இவற்றில் திறமை!இந்த வளர்ச்சி சாதாரணமான வளர்ச்சி, தக்க சூழ் நிலையில்ஏற்படும் வளர்ச்சி, மேதைகள் இந்தப்படிப்படியான
முன்னேற்றங்களை கொஞ்சம் தாண்டிக்குதித்து வந்துவிடுகிறார்கள்.
ஆரம்பத்திலேயே மூளைக்கான அத்தனை நியூரான்களையும் கொண்டுவந்து விடுகிறோம். உடலில் மற்ற பாகங்களில் ஸெல்கள் இறக்கஇறக்க, அவற்றைப் புதுப்பித்துக்
கொள்கிறோம். ஆனால், மூளை ஸெல்கள் அப்படியில்லை.ஆரம்பத்தில் கொடுத்ததோடு சரி; புதுப்பித்தல் கிடையாது.
எனவே, வயசிலிருந்தே தினம் ஆயிரக்கணக்கானஸெல்களை இழக்க ஆரம்பிக்கிறோம். வருஷத்துக்கு ஒரு கிராம்வீதம் மூளை குறைகிறது.
எனவே அடுத்த முறை, நடிகை மீனா புது வீடு மாற்றியதைப்பற்றிப் படிக்கும்போது, அந்த அரிய மூளையை எத்தனைவேஸ்ட் பண்ணுகிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இருபதிலிருந்து இழக்க ஆரம்பித்த மூளைத்திறன் ஐம்பதுக்குப்பின் அதிகமாகவே குறைகிறது. வேகமாகவே குறைகிறது.
கிழவாடிகள் எல்லாம் நாட்டை பரிபாலனம் பண்ணுவதுஅனுபவத்தின் பலத்தினால்தான். அந்த அனுபவ வாய்ப்பைச்சின்னவர்களுக்கே கொடுத்தால், வயசானவர்களைவிட நன்றாகவே செயல்படுவார்கள்.
மேதை வேறு. மேதை என்பது சிறந்த வித்வான், செஸ்ஆட்டன், கவிதைக்காரன், பிலாசபிப்பவன் போன்றவர்கள்.
உயிர்வாழ நேரடியாகத் தேவையில்லாத சமாசாரங்களில்முழுத்திறம் பெற்று மலர்வதற்குக் கொஞ்சம் வருஷம் ஆகிறது.அவர்களில் கவிஞர்கள் 25-லிருந்து வரை மகத்தானகாவியங்கள் செய்கிறார்கள். தத்துவஞானிகளுக்கு உலகம் புரிய35 வயசாவது ஆகிறது. எழுத்தாளர்கள் வயசானால்தான் அமர
இலக்கியம் படைக்கிறார்கள். ஜனாதிபதிகளுக்கு 55-வதுவேண்டும். விதிவிலக்குகளும் உண்டு.
மொஸார்ட் போன்றவர்கள் 10 வயதில்
ஸிம்ஃபனி என்று எழுத ஆரம்பித்தார்களாம். மாறாக ரீகன்,கலீலியோ, பெர்ட்ராண்ட் ரஸ்பல் போன்றவர்கள் ரொம்ப வயதானப்பிறகே சிறப்படைந்தார்கள். ரசல் 90வயசானப்புறம்தான் சுயசரிதையை எழுதினார். எல்லோருமேஅறிவுள்ளவர்கள்தான்!
அடுத்தமுறை), "அறிவிருக்கா?" என்று யாராவது கேட்டால்,
"இந்தக் கேள்வி கேட்டதுக்கு உன்னை அறையாம இருக்கனே,
அதுவே அறிவுதான்!" என்று பதில் சொல்லுங்கள்.
-சுஜாதா.
Comments
Post a Comment