இந்த நிலை மாறிவிடும்.


இந்த நிலை மாறிவிடும்.


1945-ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கமயூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன்பொரியும் சாப்ளின் மீது
குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவரது தரப்புநியாயங்களை அமெரிக்க
அரசு கேட்காததால், வேறுவழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன்
சுவிட்சாலாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.

1972... காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு. 'உலகின் தலைசிறந்த
நகைச்சுவை நடிகர்' விருது பெற சாப்ளினை அழைத்தது. பரிசினை
ஏற்றுக்கொண்டாலும் அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி மீண்டும்
சுவிட்சர்லாந்து கிளம்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படிஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?" எனக் கேட்டார்கள். சாபளின் சிரித்தார்... --இந்த
நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி. துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும்கூட!"
வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞனின் அந்த மந்திரச் சொல்.



Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.