Posts

நிறை கவனம் ஓஷோ.

அதே போன்று, நுகர்தல், தொடுதல், தென்றல் காற்றை உணர்தல், சூரியனின் கதிர்களை உணர்தல் ஆகியவற்றையும் செய்து பாருங்கள். நிலவைப் பாருங்கள்; அதை வெறுமனே பார்ப்பதிலேயே நிறைகவனம் உள்ள ஒரு அமைதியான நீர்நிலை போல் ஆகிவிடுங்கள்; அப்போது அந்த நிலவு அபரிமிதமான அழகுடன் உங்களுக்குள் பிரதிபலிக்கப்படும். உங்களது வாழ்க்கையில், இடைவிடாமல் நிறைகவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் நீங்கள் மறக்கலாம். அதற்காக துக்கப்படாதீர்கள். அது இயல்பானது. பல லட்சம் பிறவிகளாக நீங்கள் இந்த நிறைகவனத்தை முயன்று பார்க்கவில்லை. எனவே, நீங்கள் மீண்டும் மீண்டும் இதை மறப்பது இயல்பானது, இயற்கையானது. ஆனால், உங்களுக்கு மீண்டும் நினைவு வரும் போது, மீண்டும் கவனிக்கத் தொடங்குங்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் : நீங்கள் கவனிப்பதற்கு மறந்துவிடும் போது, அதற்காக வருத்தப்படாதீர்கள்; அதற்கான மனம் வருந்தாதீர்கள், அப்படிச் செய்தால், மீண்டும் நீங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பீர்கள். "நான் தவறவிட்டு விட்டேனே," என்று நீங்கள் சங்கடப்படாதீர்கள். #ஓஷோ

பிறப்பு இறப்பு ஓஷோ.

 நம் வாழ்வில் இரண்டு மாபெரும் நிகழ்ச்சிகள் நம்முடைய அனுமதி இல்லாமல் நேருகின்றன. ஒன்று பிறப்பு. அடுத்தது இறப்பு நாம் பிறக்கும்பொழுதே இறப்பும் கூடவே பிறக்கிறது. இந்த பிறப்புக்கும். இறப்புக்கும் இடைப்பட்ட காலமே வாழ்வு இந்த வாழ்வின் அமைப்பு, பெரும்பாலும் நம் கையில்தான் இருக்கிறது. சிறு வயதில் கோலி, நீச்சல், ஓடுதல் போன்ற விளையாட்டுப் பந்தயங்களில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வம், பிறகு பணம், அந்தஸ்து, படிப்பு, வசதிகள் போன்றவற்றில் அடுத்தவர்களைவிட நாம் உயர்வாக இருக்க வேண்டும் என்ற கொள்கையாக மாறுகிறது. ஆக மனிதனின் மனம் அடிப்படையில் மாறவே இல்லை. இலக்குதான் மாறி இருக்கிறது. இதை ஒருவன் எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ளுகிறானோ அவ்வளவு சீக்கிரம் அவன் பார்வையின் கோணம் மாறுகிறது. உலகத்தை நோக்கியே நிற்கும் தன் பார்வையை (Extrovert) 180 டிகிரி திருப்பி, தன்னை நோக்க ஆரம்பிக்கிறான் (Introvert). இந்த உலகத்துப் பொருள்களுக்கு ஆசைப்படுபவன் யார்? அதனால் முடிவில் அடையப் போகும் பயன் என்ன? என்று ஆராயத் தொடங்குகிறான். ஒருவனின் ஞானம் இங்குதான் ஆரம்பமாகிறது. ஒரு விழிப்புணர்வு உண்டாகிறது. இந்த விழிப்புணர்வோடு நாம் இந...

எண்ணங்கள்.

 எண்ணங்கள் மீது கவனம் செலுத்துவது அதற்கு ஊட்டம் அளிக்கும் செயல் போன்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எவ்வித முக்கியத்துவமும் தராமல், அக்கறை இன்றி இருந்தால், எண்ணங்கள் தானாக மடிந்துபோகத் தொடங்கிவிடும். அவை சக்திபெறவோ, உயிர் பெற்றிடவோ வேறு அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. நீங்கள்தான் அவற்றின் சக்தியாக இருக்கிறீர்கள். அவற்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எண்ணங்களில் இருந்து விடுபடுவது மிகவும் சிரமம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். எண்ணங்களிலிருந்து விடுபடுவது உலகிலேயே மிகவும் எளிதான செயலாகும். ஆனால் அதைச் சரியான முறையில் செய்ய வேண்டும். சாலையோரம் ஒதுங்கி நின்று விடுவதுதான் சரியான வழிமுறையாகும். போக்குவரத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போகவிடுங்கள். எந்த ஒரு நல்ல தீர்ப்போ அல்லது மோசமான தீர்ப்போ வழங்க வேண்டாம். பாராட்டவும் வேண்டாம். குறை சொல்லவும் வேண்டாம். அமைதியாக இருந்து விடுங்கள் என்பதே அதன் அர்த்தம். அதுபோதும். -ஓஷோ

The Unknown Saint

Image
 "The Unknown Saint.".   It's a charming story about a thief who steals from a village in the Moracco region and runs away with his booty hidden under a rock. When he returns to get the money, he finds that the rock has changed into a tomb. As he attempts to dig the tomb up, it abruptly transforms into a mosque.   Authentically endearing characters, a simple musical style, funny jokes, and a story that is easy to identify with all contribute to this story's appeal.   The village barber, a struggling farmer, his grandfather, the tomb guard, his dog, the village doctor, and his Shia assistant are all characters in this wonderful story.   These are a few of the most remarkable features of this story that endear it to readers.   Definitely worth watching.           

தமிழீழ விடுதலைப் புலிகள்.

" களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! எம்மில் உண்டு ஒரு பொருநன் வைகல் எண்டேர் செய்யும் தச்சன் திங்கள் வழித்த கால் அன்னோனே. நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச்சக் ரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!"

Where is Anne Frank

The diary entries of Jewish girl Anne Frank, who perished in a Nazi concentration camp under Hitler, serve as evidence of the genocide. More than 60 languages have published this book.   Frankfurt, Germany, welcomed Anne Frank on June 29, 1929. When the Nazi army started hunting Jews, he and his parents and sister Margaret lived in hiding in a covert dungeon. For two years, they have been hiding in a place that is not public. .   The happenings in Anne's life during these gloomy times were recorded in her diary. These diaries were written in Dutch and published in English in 1950.     In her diaries, Anne Frank recorded the stories she told her fictional friend Kitty.   Where Is Anne Frank is an animated movie that tells the story of Anne Frank and the Nazi crimes committed during her lifetime through the eyes of her fictional friend Kitty. Israeli director Ari Folman is in charge of the direction.     They have produced a somb...

Baran Iran movie.

 In the 1990s, religious fundamentalists, the Taliban, took over Afghanistan. Following that period, the story is set in Iran. Baran is the name of the heroine, and it is a simple love story. In the Afghani language, Baran means rain, which perfectly symbolizes the grammar of love. Rain does not speak, but it conveys a cooling and prospering feeling that makes you fall in love. These symbols are the language of rain. Similarly, the heroine Baran does not speak anywhere in the film, but the impressions she left on Latif are indelible. As long as there is love, as long as there is man, as long as there is life in the world, they will last. She didn't know until the  end that he would have sacrificed everything—except his life—for her.   The film is a beautiful poem. Movie Name Baran. Directed by Majid Majid.

தாய்த் தெய்வம்.

 கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம் தமிழர்களின் கடல்துறைத் தெய்வமாகத் தோன்றியிருக்க வேண்டும். 'கடல்கெழு செல்வி' என்று சங்க இலக்கியம் (அகநா.370) குறிப்பிடும் பழைய தாய்த் தெய்வமும் அதன் சடங்குமுறைகளும் எவ்வாறு மறைந்து போயின என்று தெரியவில்லை. மீனைக் குலக் குழுச் சின்னமாகவும் கொடியாகவும் கொண்ட பாண்டியர் எனும் அரசமரபு தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றது. அவர்களுடைய தலைநகர்த் தெய்வமும் மீனோடு கூடிய பெயர் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியக் குறிப்பின்படி சுறாக் கொம்பை நட்டு வழிபட்ட 'தென் பரதவர்' என்னும் சாதியும் பிற மீனவச் சாதிகளும் நெடிய கடற்கரையும் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகம் முழுவதிலும் பரவலாக நாட்டார் தெய்வப் பெயரிடு முறைகளிலும் மீனா, மீனாள், மீனாட்சி ஆகிய பெயர்களின் செல்வாக்கினை நம்மால் மறுதலிக்கவியலாது. தந்தைத் தெய்வம் இல்லாமல் தனித்த தாய்த் தெய்வமாகத் தமிழ்நாட்டு அரசர்கள் குமரித் தெய்வத்தைக் கொண்டாடி இருக்கின்றனர் என்ற செய்தி கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. இக்குமரித் தெய்வமே சங்ககாலத் தமிழர்களின் 'கடல்கெழு செல்வியாக' இருக்க வேண்டும். இந்நினைவுகளில்...

நாளைய இயக்குநர்களுக்கான பாடத்திட்டம்?

 நாளைய இயக்குநர்களுக்கான பாடத்திட்டம்? தினமும் ஐம்பது கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும். இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். ஒரு திரைப்படைப்பாளிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும். அது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை, மனோபலத்தை கொடுக்கும். எதையும் எதிர்கொள்கிற துணிச்சல் கொடுக்கும். ஏனெனில் ஈரானில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வகையான போர்முறை. "கந்தகார்’ திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்திலிருந்து பத்து மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமராவிலிருந்து எல்லாவற்றையும் நொடியில் தூக்கிக்கொண்டு ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எந்த நாடாக இருந்தாலும் படம் எடுக்கிறவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பலம், பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும் அல்லவா. முதலில் உடல் உறுதியாக வேண்டும். அதிலிருந்து மனம் உறுதியாகும். எங்கள் திரைப்படக் கல்லூரியில் இலக்கியம் படிக்க வேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படித்துக் கொண்டிருப்போம். வாசிக்க சொல...

ஷோபா எனும் தேவதை.

தேவலோக வாசிகளான தேவதைகள் பல் யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா ஷோபா ஒரு எரி நட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம் அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். "மூன்றாம் பிறை படம் மூலமாக. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக் கொண்டேன். அப்படித் தீர்த்துக் கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன். ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு.... எனக்கு...... எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்... பாலுமகேந்திரா