பிறப்பு இறப்பு ஓஷோ.
நம் வாழ்வில் இரண்டு மாபெரும் நிகழ்ச்சிகள் நம்முடைய அனுமதி இல்லாமல் நேருகின்றன. ஒன்று பிறப்பு. அடுத்தது இறப்பு நாம் பிறக்கும்பொழுதே இறப்பும் கூடவே பிறக்கிறது.
இந்த பிறப்புக்கும். இறப்புக்கும் இடைப்பட்ட காலமே வாழ்வு இந்த வாழ்வின் அமைப்பு, பெரும்பாலும் நம் கையில்தான் இருக்கிறது. சிறு வயதில் கோலி, நீச்சல், ஓடுதல் போன்ற விளையாட்டுப் பந்தயங்களில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வம், பிறகு பணம், அந்தஸ்து, படிப்பு, வசதிகள் போன்றவற்றில் அடுத்தவர்களைவிட நாம் உயர்வாக இருக்க வேண்டும் என்ற கொள்கையாக மாறுகிறது. ஆக மனிதனின் மனம் அடிப்படையில் மாறவே இல்லை. இலக்குதான் மாறி இருக்கிறது.
இதை ஒருவன் எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ளுகிறானோ அவ்வளவு சீக்கிரம் அவன் பார்வையின் கோணம் மாறுகிறது. உலகத்தை நோக்கியே நிற்கும் தன் பார்வையை (Extrovert) 180 டிகிரி திருப்பி, தன்னை நோக்க ஆரம்பிக்கிறான் (Introvert). இந்த உலகத்துப் பொருள்களுக்கு ஆசைப்படுபவன் யார்? அதனால் முடிவில் அடையப் போகும் பயன் என்ன? என்று ஆராயத் தொடங்குகிறான். ஒருவனின் ஞானம் இங்குதான் ஆரம்பமாகிறது. ஒரு விழிப்புணர்வு உண்டாகிறது.
இந்த விழிப்புணர்வோடு நாம் இந்த இடைப்பட்ட வாழ்வை வாழ ஆரம்பித்தால், அது ஆனந்தமயமாகிறது. இந்த ஆனந்தமயமான வாழ்வே பேரானந்தத்திற்கு வழி வகுக்கிறது. மனதோடு கூடிய உங்கள் வாழ்வு உலகப் பற்று உடையது. அது எப்பொழுதும் உலகத்தை நோக்கியே செல்லும் அப்படிச் செல்லும் மனதை இறுக்கம் (Seriousness) நிறைந்ததாக ஆக்காமல் மகிழ்ச்சியாக, கொண்டாட்டமாக, ஆனந்தமாக, அன்பும். கருணையும் உடையதாக ஆக்குங்கள். இப்படி இலேசாகும் மனம், தன்னைச் சுலபமாகப் பார்க்க ஆரம்பிக்கும். இது ஒரு கலைதான்.
Comments
Post a Comment