Kentucky Fried Chicken.
ஹார்லன் சான்டர்ஸ் என்பவரிடம் ஒரு பிரெஷர் குக்கரும் ஓர் உணவுக் குறிப்பும் இருந்தன. ஆனால் அவரிடம் கற்பனை மட்டும் இருந்திராவிட்டால், இந்தப் பிரெஷர் குக்கரோ அல்லது பதினோரு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அடங்கிய அவரது உணவுக் குறிப்போ இங்கு இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.
"கென்டகி மாநிலத்திலுள்ள கார்பின் நகரில் ஹார்லன் சான்டர்ஸ் என்பவர் சொந்தமாக ஓர் உணவகத்தை நடத்தி வந்தார். ஆனால் அந்தப் பகுதியில் புதிதாக ஒரு நெடுஞ்சாலை கட்டப்பட்டபோது, அவரது உணவகம் இருந்த சாலையை உபயோகப்படுத்துவதைப் பொதுமக்கள் நிறுத்திவிட்டனர். எனவே சிறிது காலத்திற்குள் அவரது வியாபாரம் ஸ்தம்பித்தது. சிறிதளவு பணமும், ஃப்ரைடு சிக்கனுக்கான உணவுக் குறிப்பும், அதை ஒரு பிரெஷர் குக்கரில் விரைவாக சமைப்பதற்கான ஒரு வழிமுறையும் மட்டுமே அவரிடம் மிச்சமிருந்தன. அறுபத்தியிரண்டு வயதில், அவர் மீண்டும் ஒருதொழிலைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.அப்போதுதான் அந்த மாயாஜால அம்சமும் கற்பனையும்களத்தில் இறங்கின. தான் இனிமேல் ஃபிரைடு சிக்கனைவிற்கப் போவதில்லை, மாறாக அதை சமைப்பதற்கான வழிமுறையை மட்டுமே விற்கப் போவதாக அவர் முடிவு செய்தார். அவர் தனது சமையல் குறிப்பையும் பிரெஷர் குக்கரையும் தன் காரில் போட்டுக் கொண்டு. மற்ற உணவகங்களின் உரிமையாளர்களிடம் தனது செயல்முறையை விளக்கிக் காட்டி, ஃபிரைடு சிக்கன் தயாரிப்பதற்கான தனது பிரத்யேகமான வழிமுறையை அவர்களிடம் விற்க முயன்றார். ஒரு சிலர் அதை வாங்க முன்வந்தனர். முதல் இரண்டு வருடங்களில் அவர் ஐந்து கிளைகளுக்கான உரிமங்களை விற்றார். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் அவர் இருநூறு கிளைகளுக்கு உரிமங்களை வழங்கியிருந்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு அறுநூறு கிளைகளை எட்டவிருந்த நேரத்தில், அவரது நிறுவனத்தை வாங்குவதற்கு ஒரு பெரிய முதலீட்டு நிறுவனம் அவரை அணுகியது. ஹார்லன் சான்டர்ஸின் வெற்றியின் மாயாஜாலம் வெறுமனே அந்த உணவுக் குறிப்பிலோ அல்லது பிரெஷர் குக்கரிலோ மட்டும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட புதிய உரிமையாளர்கள் அவர் தங்கள் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்க வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டு, 1980ம் ஆண்டு தான் இறக்கும்வரை அப்பொறுப்பில் நீடித்தார். இன்று எண்பதுக்கும் அதிகமான நாடுகளில் சுமார் பன்னிரண்டாயிரம் கேஎஃப்சி உணவகங்கள் இருக்கின்றன. அவற்றின் ஆண்டு வருமானம் சுமார் ஆயிரம் கோடி டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment