எனது பெயர் இஸ்ரேல்



எனது பெயர் இஸ்ரேல்


நாடற்றயர்களுக்காக நான் பிறந்தேன். அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களின்  உரிமைகள் நான் வந்தபின் பறிக்கப்பட்டன எனது மக்கள் 400 பாலஸ்த்தீனிய கிராமங்களை அழித்து தரைமட்டமாக்கினர். அவர்களில் வரலாற்றை மண்ணோடு மண்ணாக்கினர். இந்தச்செய்கையின் மூலம் அவர்களுக்குதான் படிப்பித்த பாடம் என்னவெனில் ஒன்று செத்து மடியுங்கள் இல்லை வெளி யேறுங்கள் என்பதாகும்.

எனது பெயர் இஸ்ரேல்.

எனது குடிமக்கன் சிலர் படுகொலைகளைச் செய்கிறார்கள், பின்னர் அவர்களே பிரதம மந்திரிகள் ஆகிறார்கள். 1948 இல் மனேச்சபிகின் உத்தரவின் பேரில் டெயர் பாசின் வாழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையில் 100 பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். 1958 இல் ஏரியம் ஷாறன் உத்தரவின் பேரில் குப்பியவது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1982 சப்ரா மற்றும் ஷற்றிலா -அகதி முகாம்களில் வாழ்ந்த 2000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

எனது பெயர் இஸ்ரேஸ்

1948 78 சதவீதமான பாலஸ்தினிய மண்ணிலிருந்து நான் பிறந்தேன், அப்போது பாலஸ்த்தினியர்களை நான் வெளியேற்றினேன். ஐரோப்பா மற்றும் உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூதர்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றினேன். இங்கு பல்லாயிரம் வருடமாக வாழ்ந்த பாலஸ்ததீனியர்களை நான்

இங்கு மீள் குடியேற அனுமதிக்கவில்லை. ஆனால் உலகில் எந்த மூலையில் இருந்து யூதர்கள் இங்கு வந்து குடியேறினாலும் அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் உடனடியாக குடியுரிமை வழங்கினேன்.

எனது பெயர் இஸ்ரேஸ்,

1967இல் மிகுதியாக இருந்த பூர்விக பாலஸ்தினிய நிலங்களை அபகரித்ததோடு வெஸ்ட் பாங் கிழக்கு ஜெருசலேயா நிலங்களில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வை இராணுவ அடக்குமுறைக்குள் கொண்டு வந்து அவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறேன். இதன் மூலம் பாலஸ்த்தீனியர்களுக்கு நான் கற்பிக்கிற பாடம் என்னவேனில் அவர்கள் இந்த நிலத்தில் வேண்டாத விருந்தாளிகள், இறுதியாக அவர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு ஜோர்டன் மற்றும் செனானில் உள்ள அகதி முகாமகளில் வாழும் பல மில்லியுன் பாலனத்தினிய அகதிகளோடு சேர்ந்து கொள்வது தான்.

எனது பெயர் இஸ்ரேல்,

அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் என் செயல்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கின்றன. இதற்காக நான் பல மில்லியன் பணத்தை ஒதுக்கியிருக்கிறேன். நீங்ளே பாருங்களேன், அகில உலக மீடியாக்களில்! நான் செலவிடும் பணம் எத்தனை கச்சிதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

எனது பெயர் இஸ்ரேல்,

பாலஸ்த்தீனியர்களே! உங்களுக்கென்ன வேண்டும்" சமாதானம்? நான் உங்களுடன் பேச்சு வார்த்தைக்குவருகிறேன் நீங்கள் முனிசிபல்டிகளை நிர்வகிக்கலாம் ஆனால் நாட்டின் எல்லைகள், நீர் வளம், வான்வெளி எல்லைகள் மற்றும் முக்கியமானவைகள் எம் கட்டுப்பாட்டிற்குள்ளேதான் இருக்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கும் போதே நான் உங்கள் மலைகளை அபகரிப்பேன், அங்கு ஆயுதமேந்திய தீவிரவாதிகளைக் குடியேற்றுவேன். இந்தக்குடியேற்றங்கள் பிரதான போக்குவரத்துப் பாதைகளோடு பிணைக்கப்பட்டிருக்கும். இந்தப்பாதைகளை நீங்கள் பயன்படுத்த முடியாது நீங்கள் உங்களுக்காக வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பது மட்டுமல்லாமல் நீங்கள் வாழும் எல்லாத் திசைகளும் கண்காணிப்பரண்களால் சூழப்பட்டிருக்கும். கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். எனது பெயர் இஸ்ரேல்,

உலகத்தில் நான்காவது சக்தி வாய்ந்த ராணுவமும் அணுவாயுதங்களும் எண் வசம் உள்ளன. என்ன துணிச்சலில் உங்கள் சிறுவர்கள் எனது ராணுவத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ள வெறும் கற்களை பாவிக்கிறார்கள்! என்னுடைய ராணுவம் அவர்கள் தலையை துண்டாடுவதற்கு சற்றும் தயங்காது என்று உங்களுக்குப் புரியாதா?7 மாதங்களில் உங்களில் 900 பேரைக் கொன்றிருக்கிறேன். 17000 பேர்களை காயப்படுத்தி இருக்கிறேன். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், இதைத் தொடர எனக்கு எந்த தடைகளும் இல்லை, உலகம். இதை தட்டிக்கேட்காது.

எனது பெயர் இஸ்ரேல்

உங்களுக்கு என்ன வேண்டும் 'சுதந்திரமா? என்னிடம் கனரக ஆயுதங்களும் துப்பாக்கிகளுமே உள்ளன. நான் உங்களின் நகரங்களை கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கிறேன். உங்களுடைய மரங்களை வேரோடு பெயர்த்திருக்கிறேன், உங்கள் வீடுகளை தரைமட்டமாக்கி இருக்கிறேன், இண்ணமும் நீங்கள் என்னிடம் விடுதலையைக் கோரி நிற்கிறீர்கள்? புரிந்து கொள்ளவே மாட்டீர்கள? உங்களுக்கு எந்தக் காலத்திலும் சமாதானமோ விடுதலையோ கிடையவே கிடையாது ?
ஏனெனில், எனது பெயர் இஸ்ரேல்!

Dr Norman Finkelstein (American political scientist)




Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.