தொல்குடி பரதர்.


பரதவர்கள் தொல்குடிகள்தான். சங்க இலக்கியங்கள்ல அவர்களுக்கு ஒரு தனி அரசு இருந்ததா குறிப்பு இருக்கு. 'தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டினார்' (புறம் 378) அப்படின்னு ஒரு சங்கப்பாடல் இருக்கு. இன்னமும் தூத்துக்குடில அதோட எச்சப்பாடல்லாம் இருக்கு. 

பேரா.தொ.ப

கொற்கைக் கடலில் முத்து உண்டானது போலவே சங்குகளும் உற்பத்தியாயின. பரதவர் கடலில் முழுகிச் சங்குகளை எடுத்தபோது, சங்கு முழங்கி ஊருக்குத் தெரி வித்தார்கள்.

இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி

வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்

ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்

கலிகெழு கொற்கை'

(அகம், 350:11-13)

(வலம்புரி - வலம்புரிச் சங்கு: பரதவர்-கடற்கரையில் வசிக்கும் நெய்தல் நிலமக்கள் : கடலில் கப்பல் ஓட்டுவதும் முத்து சங்குகளைக் கடலில் முழுகி எடுப்பதும் இவர்கள் தொழில்: பணிலம் ஆர்ப்ப-சங்கு முழுங்க)


கொற்கைக் கடலில் மட்டுமன்று, கடலில் பல இடங்களிலும் கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது.

சங்குகளை(வலம்புரிச் சங்குகள், இடம்புரிச் சங்குகள்) சிறு வாளினால்அறுத்து அரத்தினால் அராளி அழகான வளையல்களைச் செய்தார்கள்.

'வல்லோன்

வாளரம் பொருத கோணேர் எல்வளை'

(நற்றிணை, 77:8-9)

வளையல்களில் கொடிகள் பூக்கள் வரிக் கோடுகள் முதலியவை அமைத்து அழகாகச் செய்யப்பட்டன. வளையல் அறுக்கும் தொழில் ஆங்காங்கே நடந்தது. சங்கச் செய்யுள்களில் இத்தொழில் கூறப்படுகின்றது. 'அரம்போழ் அவ்வளை' (ஐங்குறு நூறு, நெய்தல் 106) ‘கடற்கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை' (ஐங்குறு, வளைபத்து 48) 'கோடீர் எல் வளை' (ஐங்குறு, வளைப்பத்து) 'கோடீர் இலக்குவளை' (குறும். 31:5) (கோடு-சங்கு) சங்குகளை வளையாக அறுத்துத் தொழில் செய்தவர்களுக்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர்

'வேளாப் பார்ப்பான் வாள்அரம் துமித்து வளைகளைந் தொழிந்த கொழுந்து'

(அகம், 24: 1-

நாவாயில் கடல் வாணிகம் செய்தவர் நாவிகர் என்று பெயர் பெற்றனர். கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் என்று பெயர் பெற்றனர். மாநாவிகர் என்னும் பெயர் மருவி மாநாய்கர் என்று (Navigation,Navy) (நாவாய் மரக்கலம்.) நாவாய்களில் வாணிகம் செய்தவன் நாவிகன் நாவிகன் என்பது நாய்கன் என்று மருவிற்று. சிலப்பதிகாரக் காவியத் தலைவியாகிய கண்ணகி காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்த ஒரு மாநாய்கனுடைய மகள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த அந்த மாநாய்கனையும் அவள் மகளான கண்ணகியையும் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது. 'நாகநீள் நகரொடு நாகநா டதனொடு

போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள். (சிலம்பு, மங்கல வாழ்த்து).

'நெல்லும் உப்பும் நேரே, ஊரீர் கொள்ளிரோ வெனச் சேரிதொறும்

நுவலும் (அகம், 390:3-9)

உப்பை நெல்லுக்கு மாற்றிய உப்பு வாணிகர் தமக்குக் கிடைத்த நெல்லைச் சிறு படகுகளில் ஏற்றிக்கொண்டு கழி களில் ஓட்டிச்சென்றதை கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார்.

'குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி'

என்று (பட்டினப்பாலை 28-30) அவர் கூறுகிறார். உப்பை

நெல்லுக்கு மாற்றியதை உலோச்சனார் கூறுகிறார். 'உமணர்

தந்த உப்பு நொடை நெல்' (நற்றிணை, 254:6) கடற்கரையோரத்திலே நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று சுரு, இறால் முதலான மீன்களைப் பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த மீனைப் பரதவ மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றினார்கள் என்று குன்றியனார் கூறுகிறார். 'இனிது பெறு பெருமீன் எளிதினிற் ாறி" (நற்றிணை, 239:3) பரதவ மகளிர் கடல்மீனை நெல் லுக்கு மாற்றியதை நக்கீரரும் கூறுகிறார்: 'பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத், தயிர்மிதி மிதவை யார்த்துவம்" (அகம், 340: 14-15). 'உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு' என்று குடவாயில் கீரத்தனார் கூறுகிறார். (அகம். 60:4),

பரதவ மகளிர் கடல்மீனைத் திருவிழா நடக்கிற ஊர் களில் கொண்டுபோய் எளிதில் விற்றதைச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.

'திமிலோன் தந்தக டுங்கண் வயமீன் தழையணி அல்குல் செல்வத் தங்கையர் விழவயர் மறுகின் விலையெனப் பகரும் கானலஞ் சிறுகுடி (அகம், 320:2-5)

மீனை நெல்லுக்கு மாற்றினார்கள். பண்ட மாற்றினால் கிடைத்த நெல்லை அம்பியில் ஏற்றிக்கொண்டு கழிகளின் வழியே வந்ததைப் பரணர் கூறுகிறார்.

மீன்நொடுத்து நெல் குவைஇ மிசை அம்பியின் மனைமறுக்குந்து'(புறம், 343: 1-2).

கிறித்துவர்களா அவங்க மாறுவதற்கு முன்பு வழிபாட்டு முறை எப்படி இருந்தது? 

அவர்கள் ஒரு சுறாக்கொம்பை நட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்னு சங்க இலக்கியத்துல இருக்கு


'சினைச் சுறவின்கோடு நட்டு, மனைச் சேர்த்திய வல்ல‘32/115 அப்படின்னு பட்டினப்பாலையிலேயே சுறாவின் கொம்பை நட்டு வழிபட்டதைச் சொல்றாங்க. தொடக்க கிறித்துவ மிஷனரிகள் இதை எழுதும்போது அவர்கள் ஒரு சுறாக் கொம்பை நட்டு வழி பட்டார்கள்னு எழுதுனாங்க. அதுதான் அவங்க வழிபாடு.


படவன் - பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். "மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன்"

(திருமந். 2031).

பரவன் பரதவன்

1. மீன் பிடிப்போன். "மீன்விலைப் பரதவர்" (சிலப். 5:25). "திண்டிமில் வன்பரதவர்" (புறம்.24:4). 2. நீர்வணிகன், வணிகன். (சிலப் 5:157, உரை). 3. குறுநில மன்னன். "தென்பரதவர் மிடல்சாய" (புறம். 378).


பரதவன்-பரதன்-1. மீன்பிடிப்போன். "படர்திரைப் பரதர் முன்றில்" (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. "பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" (சிலப். 2:2), 3. வணிகன். "பரத குமரரும்" (சிலப். 5:158).


பரதவர் கடலோடிகளும் (Mainers)சுற்றுக்கடலோடிகளுமாயிருந்ததனால்

(Circumnavigators),வடதிசைச் சென்று வடபார் வடவை முனையில் சிற்சிலவேளைகளில் தோன்றும்

வண்ணவொளியைக் கண்டு,அதற்கு யென்று பெயரிட்டனர்.வடம் வடவை = வடதிசை நெருப்பு.

சிலப்பதிகாரம்

மனையறம் படுத்த காதை

நிலைமண்டில ஆசிரியப்பா உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின் பரதர் மலிந்த பயன்கெழு மாநகர் முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவா அ வளத்த தாகி அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் ஒருங்குதொக்கு அன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக் குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்.

நெய்தல் திணையும் வழிபாடுகளும்:


வருணன் நெய்தல் திணைக்குரிய தெய்வமாகச் சுட்டப்படினும்

சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட வருணன் பற்றிய குறிப்பு

இல்லை சுறாக் கொம்பு; ஊர்க்காவல் தெய்வம், கடல் தெய்வம், நீர்நிலைத் தெய்வம், கடவுள் மரம் போன்ற வழிபடு தெய்வங்களைச் சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் காண இயல்கிறது. உவமைகளாகப் பிற பல தெய்வங்களும் இடம் பெறுகின்றனர்.

பட்டினப்பாலை சுறாவின் கொம்பை நட்டு பரதவர் வழிபட்ட

செய்தியை,

'சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினால்

புன்றலை இரும்பரதவர்"(அடி.-86-90)

எனும் பாடற்பகுதியில் எடுத்து உரைக்கிறது (உரையாசிரியரே சுறாவின் கொம்பை நட்டு வருணனை வழிபட்டனர் என்கிறார். இதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை.)

திண் திமில் பரதர்" - புற நானூறு. - வலிமையான களன்களை இயக்குபவர் பரதவர்கள்.

"புன் தலை இரும்பரதவர்" - பட்டிணப்பாலை - உப்புகாற்று செம்பட்டை முடியுடன் கூடிய இரும்பையொத்த வலிமை பொருந்தியவர்கள் பரதவர்கள்.

“தென்பரதர் மிடல் சாய வட வடுகர் வாள் ஒட்டி” - புற நானூறு.

’தென் பரதர் போர் ஏறே” - மதுரை காஞ்சி.

"பரதவர் நுளையரோடு பறியர், திமிலர் சாலர்

கருதியக் கடலர் கோலக்கழியரே நெய்தல் நில மக்கள்",

(சூடாமணி நிகண்டு சூத்திரம்77)










Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.