நாடாரின் மேலான நிலை.



நாடாரின் மேலான நிலை

தொல்லியல் அலுவலரும் மிகச் சிறந்த ஆய்வாளரும் ஆன எஸ். இராமச்சந்திரனும், அ. கணேசன் என்பவரும் இணைந்து எழுதிய

'தோள்சீலைக் கலகம் தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்' (2010) என்ற நூலில் முக்கியமான சில கருத்துகள் வருகின்றன. இவை வருமாறு: நாடார்சாதியினரில் தென் தமிழகத்தில் தமிழகத்தில் நாட்டு நிர்வாகத்திலும், வரிபிரிக்கும் பொறுப்பிலும் இருந்தவர்கள் என்பது பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இவர்கள் தமிழகத்தில் நாட்டு நிர்வாகத்திலும் வரிபிரிக்கும் பொறுப்பிலும் இருந்தனர். இவர்களில் குறுநிலத் தலைமைப் பொறுப்பில்

இருந்தவர்களும் உண்டு.

திருநெல்வேலி, தென்காசிப் பகுதிகளில் மட்டுமே செல்வாக்குடையவர்களாய் இருந்த பாண்டியர்கள் நாடாழ்வார் என அழைக்கப்பட்டிருக்கின்றனர். பிற்காலச் சோழர் காலத்தில் இப்பகுதியில் குடியேறிய பல தலைமுறைகளாய் வேரூன்றி வாழ்ந்த வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல சத்திரிய வம்சத்தவர்கள் நாடார்களே. இவர்களுடன் பாண்டிய வம்சத்தினர் உறவு கொண்டிருந்தனர். (மேற்படி நூல் ப. 24)

வேணாடு அரசர்கள் காலத்தில் இவர்கள் குறுநிலத்தலைவர்களாய் இருந்தனர். நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்மண்டபத்தைக் குலசேகரப்பெருமாள் கொன்றை மாலை கட்டினார். இவர் நாடார் குலத்தவர் ஆவார். (மேற்படி 62, 68) இப்படியான பல உண்மைகளை மறைத்து நாடார்களை இழிவாக

எழுதினார்கள் அயல்நாட்டு மிஷனரிகள். இவர்களில் வேறுபட்டவர், ரெவரென்ற் சற்குணம் வின்ஃபாரெட் அய்யர் என்பவர். இவர் எழுதிய 'சான்றோர்குல மரபுகள்' என்ற நூல் (1870) முக்கியமானது. இது முந்தைய கால மிஷனரிகள் கூறிய பல பொய்ச்சான்றுகளைத் தகர்க்கும் ஆற்றலுடைய அடிப்படையில் எழுதப்பட்டது (மேற்படி 2010 ப 28).

நாடார் சமூகத்தினர் பிற்காலச் சோழர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் வேனாட்டு அரசர்கள் காலத்திலும் மேலான இடத்தில் இருந்ததைக் கல்வெட்டுச் சான்றுகள் வழி விளக்க முடியும் (மேற்படி நூல்).

கதைப்பாடல்களில் தேடலாம்

இராமச்சந்திரனின் கருத்தை வலியுறுத்துவதற்கு மேலும் சான்றுகளை நாட்டார் வழக்காற்றியல் வகைமைகளில் தேட முடியும். குறிப்பாக வில்லிசை, களியல் ஆட்டம் ஆகிய கலைகளில் பாடப்படுகின்ற கதைப்பாடல்களை முழுவதும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும்.வந்ததும்

அச்சில் வராததுமான கதைப்பாடல்களில் சிதம்பர நாடார்கதை, ஐவர் ராசாக்கள் கதை, வலங்கை நூல்கதை, பூலங்கொண்டாள் கதை, ஆந்திரமுடையார் கதை, குமாரசாமிகதை, காணி சாவு, கட்டிலவதானம், சேர்வைக்காரன் கதை, ஓட்டன்கதை என்னும் சிலவற்றை உதாரணமாகக் கூறலாம்.

இந்தக் கதைப்பாடல்கள் நாடார் சமூகத்தின் மேலான நிலையை வெளிப்படையாகக் கூறுகின்றன. சில மேம்போக்காகவும் மறைமுகமாகவும் பேசுகின்றன. வழக்காற்று வகைமைகள் முழுதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு வரலாற்றை உருவாக்கலாம்.

சரலூர் கல்வெட்டு'செம்பவளம் ஆய்வுத்தளம்' தலைவர் செந்தீ நடராசன் நாகர்கோவிலில் சரலூர் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டை அடையாளம் கண்டு பதிப்பித்திருக்கிறார். 43வரிகள் கொண்ட இக்கல்வெட்டு இப்போது சுன்னியாருமரி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

தமிழ் எழுத்தில் அமைந்த இக்கல்வெட்டு வேணாட்டு அரசன் வீர கேரளவர்மனின் காலத்தது. (கி.பி. 1697) கண்ணன்கரை என்ற கிராமத்தைச் சார்ந்த நாடார் செல்வர் ஒருவருக்கு குலசேகரன் என்னும் அரச மரபுப் பெயரைச் சூட்டியதும், ஆறில் ஒரு பகுதி கிரையம் கரைப்பணம் அரச வருவாயாகக் கொடுத்ததும் ஆகிய செய்திகள் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன. வேணாட்டு அரசள் நாடார் பிரமுகர்களைப் பாராட்டிய செய்திகள் அடங்கிய கல்வெட்டுகள் வேறு பலவும் கிடைக்கலாம் (ஆவணம் எண் 15 ப 110).

பிச்சைக்காலன் கதை

பிச்சைக்காலன் கதை என்ற வில்பாட்டின் மூலம் மட்டும், கலை நிகழ்வின் அடிப்படையில் அச்சில் வந்திருக்கிறது. இந்த வில்லுப்பாட்டுக் சுதை ஏடு நூலாசிரியரிடம் உள்ளது. தென் திருவிதாங்கூரில் நாடார்கள் பெரும் மிராசுதார்களாக இருந்ததற்குச் சரியான வழக்காற்றியல் சான்று பிச்சைக்காலன் கதை.

இந்தக் கதை இப்போதும் வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படுகிறது. நாஞ்சில்நாட்டில் வடக்கு சூரன்குடி ஊரில் பிச்சைக்காலன் என்ற நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் உள்ளது. இக்கோவில் கொடைவிழாவில் இக்கதை முழுதும் பாடப்படுகிறது. இது 2770 வரிகள் கொண்ட அம்மானைப் பாடல்.

திருநெல்வேலி மாவட்டம் மணியாச்சி ஊரில் (கதைப்படி மணிக்காஞ்சி) மறவர் குலத்து மாடப்பன் முக்கிய பிரதாளியாக இருந்தாள். அவனது மனைவி பிச்சம்மா. இவர்களுக்கு அரிதிப்பிள்ளை, பிச்சக்காளை என்னும் இரண்டு மக்கள் உண்டு. ஒருமுறை மணியாச்சி மறவர்கள் சிலர் மாடப்பனைத் தங்களுக்குப் போட்டியாக நினைத்துக் கொன்றுவிட்டனர்.

பிச்சம்மா அனாதை ஆனாள். மணியாச்சியில் இருக்க விருப்பமின்றித் தன் மக்களுடன் நாஞ்சில்நாட்டிற்கு வந்தாள். கோட்டாற்றில் நிலப்பாறை பணிக்கர் என்பவரைக் கண்டாள். தன் கஷ்டத்தைச் சொன்னாள். அவர், "சூரை நகர் (இன்றைய வடக்கு சூரன்குடி) ஊரில் வாழும் ஸ்ரீரங்கம்

சேனைக்குட்டி நாடார் என்னும் நிலச்சுவான்தாரிடம் போ; ஆதரிப்பார்; அவர் பண்பாளர்; இரக்கம் உடையவர்; மிகப் பெரிய செல்வந்தர்" என்றார்.

பிச்சம்மா, சேனைக்குட்டியிடம் அடைக்கலமானாள். அவருடைய மொத்த சொத்துக்களைப் பிச்சைக்காலன் நிர்வகிக்கும் அளவுக்கு நிலை வந்தது. இதனால் பொறாமை கொண்ட சிலர் பிச்சைக்காலனைக் கொல்லும்படியான சூழ்நிலையை உண்டாக்கினர். அவன் கொல்லப்பட்டபின் சிவனிடம் வரம் வாங்கித் தெய்வமானாள்.

கதைப்பாடல்

அறிமுகப்படுத்தும் போது

ஆசிரியர் ஸ்ரீரங்கம் சேனைக்குட்டி நாடாரை

ஆரநகர் ஆனதிலே சிறந்த பண்ணை நாடாளும் பத்திரமா காளியருள் பாருலகில் பெரியவர்தான்

சேத்திரமும் பண்னையாரும் திரவியத்தில் மிருந்தவர்தான் ஸ்ரீரங்கம் சேனைக்குட்டி சிறந்த நல்ல நாடாரும்

அதிரும் சேனைக்குட்டி நாடார் குதிரைகளைக் கட்டி அரசாளும் பெரிய நல் நாடாகும்

(பிச்சைக்காலன் கதை ஏடு) இப்படியே வர்ணளை போய்க்கொண்டிருக்கிறது. சேனைக்குட்டி நாடார்,

தாம் இருந்த பகுதியில் சட்டம் ஒழுங்கையும் கவனித்திருக்கிறார். இந்தக் கதை நடந்த காலத்தை அறிய நூலிலே சான்று உள்ளது. கன்னியாகுமரி தீர்த்தக்கட்டத் துறையில் உள்ள சங்கிலித்துறை பற்றிய குறிப்பு கதைப்பாடலில் வருகிறது. கி.பி. 1881ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை அறிக்கை சங்கிலித்துறை பழுது பார்க்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது (குமரி தேவசம் மராமத்து அறிக்கை 1962 ப. 222). இதனால் பிச்சைக்காலன் கதை 1881ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்று கூற முடியும்.

இக்கதைப் பாடலில் வரும் பிச்சம்மா நாஞ்சில்நாட்டிற்கு வரும்போது புத்தனாற்றைத் தாண்டி வருவதாகச் செய்தி உள்ளது. பழையாற்றில் ஒரு கிளையில் புத்தனாறு கட்டப்பட்டது 1745ஆம் ஆண்டு (செ. சதாசிவம் 1949 பக். 100- 101). எனவே இக்கதை 1750க்கும் 1825க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது எனக் கூறலாம்.இந்தக் கதைப்பாடல் வழி ஒரு விஷயம் தெளிவாகிறது. பதினெட்டாம்


நூற்றாண்டில் நாஞ்சில்நாட்டில் நாடார் சமூகத்தில் பெருமளவு நிலமுள்ள நிலச்சுவான்தார்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் திருவிதாங்கூர் அரசியல் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்று நிறுவலாம்.

பூலங்கொண்டாள் கதை

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நாடார் சாதி மக்களில்

சீராக வாழ்ந்த மாலைக்குட்டி நாடாரின் குடும்பம் ஏதோ காரணத்தால்

நாஞ்சில் நாட்டிற்குக் குடிபெயர்ந்தது. இவர்கள் நாஞ்சில்நாட்டு அகஸ்தீஸ்வரம் வந்து பாழ்நிலத்தைப் பண்படுத்தித் தோட்டம் அமைத்து வீடுகட்டி வாழ்ந்துவந்தனர். இவரது வம்சாவழியில் வந்த மாலைக்குட்டி நாடாருக்குப் பூலங்கொண்டாள் என்ற ஒரு பெண்ணும் ஏழு அண்ணன்மார்களும் உண்டு. ஒருமுறை பூலங்கொண்டாள் கொட்டை நூற்க ராட்டை வேண்டும் என்று அண்ணன்மார்களிடம் கேட்டாள். அவர்கள் ராட்டு வாங்கத்


திங்கள்சந்தை ஊருக்குப் போளார்கள். வழியில் கண்டியூர்க்காரர்கள்


இருவரைச் சந்தித்தனர். அவர்களிடம் பூலங்கொண்டாளைப் பற்றிப்


பெருமையாகப் பேசினர்.


சிலநாட்கள் கழிந்து ஒருநாள் கண்டியூர்க்காரர்கள் பூலங்கொண்டாளைப் பெண் கேட்டு வந்தனர். மாலைக்குட்டி நாடார் "எங்கள் குலம் பூர்வீசுமாய் வயல், தோப்பு, குளம் எனக் கொடிகட்டிப் பறப்பது. அரசு செல்வாக்கும் உண்டு; எங்கள் தகுதிக்கு நீ பெண் பார்க்க வரலாமா" என்று கேட்கிறார். கண்டியூர்க்காரர்கள் பூலங்கொண்டானை கொன்றுவிடுகின்றனர். அவள் பின் தெய்வமானாள். வஞ்சகமாகக்

பூலங்கொண்டானின் முன்னோர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருந்து

அகஸ்தீஸ்வரத்தில் குடியேறியது 1674

எனநூல் கூறும் (கு.

ஆறுமுகப்பெருமாள் நாடார் 1977 ப. 2). பூலங்கொண்டாள் கதையில்

தோட்டுக்காரி அம்மன் சுதைக்குறிப்பு வருகிறது. தோட்டுக்காரி அம்மன்

சுதையின் காலம் கி.பி. 1776 (அ.கா. பெருமாள் 1987 ப. 132). எனவே

அதற்கு முற்பட்டது பூலங்கொண்டாள் கதை. இதனால் இக்கதைப் பாடல்

நிகழ்ச்சிகள் பதிளெட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நடந்திருக்கலாம்.

எனவே அந்த நூற்றாண்டில் நாஞ்சில்நாட்டு அகஸ்தீஸ்வரம் பகுதியில் நாடார் சமூக மிராசுதார்கள் வாழ்ந்தரென்று சொல்ல முடியும்.

ஓட்டன்கதை

அனுஷம் திருநாள் மார்த்தாண்டவர்மா என்ற அரசர் திருவிதாங்கூர் ராஜ்யத்தை ஒருங்கிணைத்தவர் (1729-1758). இவரது தாய்மாமா ராமவர்மாவின் மக்கள் பத்மநாபன் தம்பி, இராமன் தம்பி ஆகிய இருவரும் மார்த்தாண்டவர்மாவை எதிர்த்து வாரிசுரிமை வேண்டிக் கலகம் செய்தனர்.

இந்த உள்நாட்டுப் போரில் அனுஷம் திருநாள் அரசருக்கு ஆதரவாக அனந்த பத்மநாடார் என்ற வீரர் உதவினார். இவருக்குக் களரிப்பயிற்றி மாங்குடி ஆசான், சிலம்பவீரர் சிதம்பர நாடார் போன்றோர்கள் ஆதரவாய் இருந்தனர்.


பொத்தையடி தாணுமாலய நாடார். என்ற நிலச்சுவான்தார் மார்த்தாண்டவர்மாவிற்கு அடைக்கலம் கொடுத்தார். ஓட்டன் என்பவன் ஊரூராய் அலைந்து மார்த்தாண்டவர்மா போல வேடமிட்டு, எதிரிகளிடம் இருந்து அவரைக் காப்பாற்றினார். இதனால் இவர் கொலைப்பட்டார். இந்தச் செய்திகள் தம்பிமார்கதை, ஓட்டன் கதை, ஏட்டுவடிவில் உள்ள எட்டுக் கூட்ட தம்புரான் கதை ஆகிய வில்லிசைப் பாடல்களில் வருகின்றன.

மார்த்தாண்டவர்மாவின் வாரிசுரிமைப்போர் 1731க்கு முள்பே ஆரம்பித்துவிட்டது (K.V. Krishna Ayyar 1967 P. 99-100) இதனால் அந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நாடார் குலப் பிரமுகர்களில் பலர் நிலச்சுவான்தர்களாயும், அரசியல் சார்பில் உதவும் அளவுக்குத் தகுதி படைத்தவர்களாயும் இருந்தனரென்று தெரிகிறது.

தனக்காக உயிர்விட்ட ஓட்டனுக்கு அரசர் மார்த்தாண்டவர்மா கோவில் எடுத்திருக்கிறார். நாகர்கோவில் கன்னியாகுமரி சாலையில் பொத்தையடி ஊரில் இக்கோவில் உள்ளது. அறநிலையத் துறையின் கீழுள்ள இந்தக் கோவிலில் இப்போதும் வழிபாடு நடக்கிறது. சிதம்பரநாடார் கதை


நாகர்கோவில் மணக்குடிச் சாலையில் எட்டு கி.மீ. தொலைவில் உள்ள புத்தளம் ஊரில் சிதம்பரநாடார் என்னும் மிராசுதார் இருந்தார். இவரைப் பற்றி ஒரு சுதைப்பாடல் உள்ளது. இவர் புத்தளம் பகுதியில் வரிப்பிரிக்கும் உரிமையுடையவர்; செல்வந்தர்; வீரர்; மந்திரம் மருத்துவம் அறிந்தவர்; முன்சி என்ற தன்மையுடையவர். பட்டம் உடையவர். இப்படியான பன்முகத்


சிதம்பரநாடார் பாம்பு கடித்து இறந்த பிராமணப் பெண்ணை மீட்டுத் திருமணம் செய்து கொண்டார். இதனால் கொலைப்பட்டுத் தெய்வமானார். இப்போதும் இவருக்கு வழிபாடு நடக்கிறது. இந்தக் கதை நடந்த காலத்தை அறிய நூலில் சான்றுகள் உள்ளன.


சிதம்பரநாடார் கதையில் ஓட்டனுக்குக் கோவில் எடுக்கப்பட்ட செய்தி வருகிறது (அ. தங்கதுரை 1982 ப. 9). இது 1731க்கும் 1740க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்கலாம். அகஸ்தீஸ்வரம் கு. ஆறுமுகப் பெருமாள் நாடார் வீட்டில் இருந்த சிதம்பர நாடார் கதை ஓலைப்பிரதி கி.பி. 1818இல் பிரதி செய்யப்பட்டது என உள்ளது. இப்போது இப்பிரதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ளது.


சிதம்பரநாடாரைக் கொல்ல வேண்டாம் என்ற உத்தரவைக் கொண்டுவந்த தூதன் பத்மநாபபுரம் நகரம்வழிவருவதாகக் கதைப்பாடல் கூறும். பத்மநாபபுரம் திருவிதாங்கூரின் தலைநகராக இருந்தது 1790 வரை (Balachandran 1974 P 23-24) . எனவே சிதம்பரநாடார் கதை நிகழ்ச்சிகள் 1750-90ஆம் ஆண்டுகளில் நடந்திருக்கலாம். இதன்படி பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் நாடார் சமூகத்தினர்

நாஞ்சில் நாட்டில்

மிராசுதார்களாகவும்

வரிவாங்கும்

உரிமையுடையவர்களாகவும் பல்துறை நிபுணர்களாகவும் இருந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

வலங்கைநூல் கதை

பிற்காலச் சோழர்களுக்கும் நாடார் சமூகத்துக்கும் உள்ள தொடர்பு கல்வெட்டுகளிலோ செப்பேடுகளிலோ பதிவு செய்யப்படவில்லை. ஆனால் தென்மாவட்ட நாட்டார் வழக்காறுகளில் குறிப்பாகக் கதைப்பாடல்களில் இது குறித்த செய்திகள் வருகின்றன; ஆறு கதைகளும் உள்ளன.

இந்தக் கதைப்பாடல்கள், வலங்கை நூல் கதை என்னும் மாகாளி அம்மன் கதை (கு. ஆறுமுகப் பெருமாள் நாடார் 1968), வலங்கை நூல் என்னும் வெங்கலராசன் காவியம் (ஆறுமுகப்பெருமாள் நாடார் 1979), வலங்கை வாழ்த்து (தென்காசி 1956), பத்திரகாளி கதை ( நடராசன் 1980), சப்த கன்னியர் கதை (ஏட்டு வடிவம்), வலங்கையர் வரலாறு (ஏடு), The Dateless muse (A.K. Perumal 1988) ஆகியன.

இரண்டாம் குலோத்துங்கள் காலத்தில் (1071) நாடார் குடும்பங்கள் சில சோழநாட்டிலிருந்து குடிபெயர்ந்தன. அப்போது நடந்த வலங்கையர்

கலகம் பற்றிச் சோழர் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. இக்காலத்தில் வலங்கையர் சிலர் தென்பாண்டி நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர். இதற்குக் காவிரிப் பெருக்கெடுப்பில் மண்சுமத்தல் தொடர்பான காரணக்கதை கூறப்பட்டது. வலங்கைகதையிலும் இது வருகிறது.


இப்படி குடியேறிய குடும்பங்களில் ஒன்று ஈழநாட்டிற்குச் சென்றது. அங்கே இரும்பைப் பொன்னாக்கும் வித்தையை அறிந்து சம்பாதித்த செல்வத்துடன் தென்திருவிதாங்கூருக்குத் திரும்பியது. அக்குடும்பத்தில் ஒருவர் இங்கு கோட்டைகட்டிக்கொண்டு வெங்கலராசன் என்னும் பெயருடன் குறுநிலத் தலைவராக இருந்தார். இவருடன் மணஉறவுகொள்ள வேணாட்டு அரசன் விரும்பினான். அது நடக்காததால் வெங்கலராசன் கோட்டை அழிந்தது. கதை இப்படியே போகிறது.

இதுபோன்ற நாட்டார் வழக்காற்றுத் தகவல்கள் தென்திருவிதாங் கூரில்,

நாடார் சாதியினர் உயர்நிலையில் இருந்ததைக் காட்டுகின்றன.

தென்தமிழகத்தில் இப்போது கிடைக்கின்ற அச்சில் வந்த, வராத முழுவதையும்

கதைப்பாடல்கள்

நாடார்களின் மேலான ஒருசேரவைத்து ஆராய்ந்தால் நிலையை அடையாளம் காணமுடியும். மிஷனரிகளின் தகவல்களில் சரியானவை அல்ல புனைந்துரை பல என்பது புரியும். இராமச்சந்திரனின் கருத்துகளுக்கு இவை மேலும் அரண் சேர்க்கும்,

அ.கா.பெருமாள் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.