ஊழலின் ஆதி ஊற்றே.
திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது பெரியாருக்கு வயது 72. மணமகள் மணியம்மைக்கு வயது
வெறும் 26. பொருந்தாத திருமணத்தை எல்லாம் பொதுமேடையில் வெளுத்துவாங்கியவர்; கட்டுவதுதான் கட்டுகிறீர்கள், ஒரு வயதான கிழத்தைப் பார்த்துக் கட்டிக்கொள்ளக்கூடாதா என்று கேலியாகக் கேள்வி கேட்டவர்; அப்படிப்பட்ட பெரியார் எடுத்த முடிவு அதிர்ச்சியைக் கொடுத்தது அண்ணாவுக்கு.
9 ஜூலை 1949 அன்று மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார் பெரியார். ஆகஸ்டு 15 விவகாரம் வெடித்தபோது கட்சித்தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை என்று காத்திருந்தார் அண்ணா. ஆனால், மணியம்மை திருமண விஷயத்தில்
பெரியாரின் முடிவுக்காகக் காத்திருக்க விரும்பவில்லை. முடிவெடுத்து விட்டார். கழகத்தில் இருந்து விலகிக்கொள்வோம்! தனி வழி காண்போம்! அண்ணாவின் அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு.
அண்ணாவுக்கு ஆதரவு தெரிவித்தோர் பெயர்கள் திராவிட நாடு இதழில் வெளியாகின. அந்தப் பட்டியலின் தலைப்பு: கண்ணீர்த் துளிகள்! பெரியாரின் முடிவைக் கண்டுக் கண்ணீர்விட்டுக் கதறுவதாகச் சொன்னார் அண்ணா. பின்னர் அந்த வார்த்தையைக் கொண்டே அண்ணாவின் ஆதரவாளர்களைக் கேலி செய்தார் பெரியார். அண்ணா தொடங்கிய கட்சியையும் கண்ணீர்த்துளிக்கட்சி என்றே விமரிசித்தார்.
Comments
Post a Comment