பிறந்த குழந்தைக்கு முதல் உணவு என்ன தெரியுமா?

'பிறந்த குழந்தைக்கு முதல் உணவு என்ன தெரியுமா?' என்றொரு பெண்

என்னைக் கேட்டிருந்தாள்.

சேனை புகட்டுகிறது' என்றேன். 'அதென்ன சேன?' என்றாள். 'வேறொண்ணுமில்ல, அந்தக் காலத்துல மொத்த சனமும் மலையில தான கிடந்துச்சு. அப்ப, குழந்தைக்கி மொத சுவையா சுனையில் உள்ள தண்ணியதான் சொட்டு விடுவாகளாம். அதுக்குப் பேருதான் சுனை புகட்டுகிறது. மலங்காட்டுலர்ந்து இறங்குனப்புறம் இன்னமும் விடல அத', அவளேதான் எனக்குப் பதிலும் சொன்னாள்.

இன்றைக்குப் புளியைக் கரைத்து, பானகம் போலச் செய்து, நாக்கில் தடவுகிறார்கள். வயதில் மூத்தவர்கள்தான் தடவ வேண்டும். அப்படிச் செய்பவர்களின் குணம் அக்குழந்தைக்கும் வந்துசேருமென்பது நம்பிக்கை. புளிப்பும் இனிப்புமாய்ச் சொரசொரக்கும் விரலின் தொடுதலில் அக்குழந்தை புதுக் சுவையை உதப்பி வெளியே தள்ளுகிறது. மலையில் புகட்டிய தண்ணீர், மண்ணின் குணத்தைக் குழந்தைக்குத் தருகிறது; தரையில் புகட்டும் பாளகம் மனிதர்களின் குணத்தைத் தருகிறது; இதுதான் நம்பிக்கை. 

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.