ஆலம்மன்

வான் சிறப்பும் மாமழை போற்றுதலும் கண்டது தமிழகம்.

மழையை 'மாரி' என்பர். மாரி வழிபாடு மழை வழிபாடே!

மாரியின் பெயர்களுள் ஒன்று முத்துமாரி என்பது. இது முத்துப்

போன்ற மழைத்துளி என்னும் பொருள் தரும். மழைத் துளியை

முத்துக்கு உவமை காட்டுதல் இலக்கியங்களில் பெருவழக்

குடையது.முத்துமாரி என்பது போல மாரிக்கு அமைந்த மற்றொரு

பெயர் 'முத்தாலம்மன்' என்பது 'முத்து ஆலம் அம்மன்' என்னும்

முச்சொற்கூட்டே இப்பெயர். இங்கு 'ஆலம்' என்பது நீர்க்கட்டியே.

முத்தாலம்மன் என்னும் பெயர் பெருவழக்காக இருந்தும்

அதன் பொருள் உணராராய்த் திருத்தம் செய்வார் போல்

'முத்தாரம்மன்' ஆக்கிக் கொண்டு வருகின்றனர். அதுவே

திருந்திய வடிவம் என்றும் மகிழ்கின்றனர். முத்துமாலை

அணிந்தவன் எனக் காரணம் கண்டு 'முத்து மாலை' எனவும்

பெயர் சூட்டிக் கொள்கின்றனர். இவற்றால் இப்பழஞ்

சொற்பொருள் மூடுண்டு போதலை அறிக.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.