முல்லைத் தெய்வம்.
முல்லைத் தெய்வம்
முல்லை நிலத்தில், ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருண விற்கு வானாவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டிய தாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் என்று பெயரிட்டு வணங்கினர். "இன்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ"
(கலித்.கசு) என்பதால், முகில் தெய்வமாக வணங்கப்பட்டமை அறியப்படும்.
குமரிநிலை யியல்
மால் - க. கருமை. மால் கடல்'' (பெரும்பாண். சஅள). உ.கருமுகில். "சிலைமா லுருமு’" (தஞ்சை வா. கச). ௩. கரியவ னான திருமால். “நீர்செல நிமிர்ந்த மாஅல் போல”
மால் என்னும் தெய்வப் பெயர், உலகவழக்கில் என்றும் திருமால் என்று அடைபெற்றே வழங்கும். மாலை மாயோன் என்னுஞ் சொல்லாலுங் குறிப்பது இலக்கிய வழக்கு. மாயன் மாய வன் என்பன மாயோன் என்பதன் மறு வடிவங்கள். மால் மாயன் என்னும் இரண்டும் ஒரே மூலத்தினின்று தோன்றிய ஒருபொருட் சொற்கள். மால்-மா-மாயோன் - கரியவன்.
Comments
Post a Comment