மதுரையின் அரசி.
இன்னும் மதுரை மக்களுடைய நம்பிக்கையின்படி மதுரை வந்து மீனாட்சிப் பட்டினமே தவிர சொக்கநாதபட்டினம் அல்ல. மீனாட்சியினுடைய ஆளுகைக்கு உட்பட்ட ஊர். தமிழ்நாட்டிலேயே ஒரு பெண் முடிசூடி அரசாளுவதாக ஒரு திருவிழா நடக்கிறது. அங்கே மட்டும்தான். பட்டாபிஷேகம் நடக்கிறது. அவர் வந்து ராணியின் கணவர் தானே தவிர, ராஜா அல்ல. இதான் மதுரையினுடைய சிறப்பு.
ஒரு நல்ல உதாரணம் தமிழ்நாட்டிலே மீனாட்சி சொக்கர் தாலாட்டு. எல்லா இடங்களிலும் வழங்குகிற ஒரு தாலாட்டு. இந்த தாலாட்டு வேறு எந்த தெய்வத்துக்கும் கிடையாது. வட்டார ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ வேறு எந்த தெய்வத்துக்கும் கிடையாது. மீனாட்சி தெய்வத்துக்கு மட்டும்தான் தமிழ்நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாலாட்டு பாடல்கள் உள்ளது. எல்லாச் சாதியும், ஏதேனும் ஒரு வகையிலே அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும் மதுரையோடு பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வெறுமனே அது அவர்களுடைய வாழ்வாதாரமாக மட்டும் அமைய வில்லை.
பேரா.தொ.ப.

Comments
Post a Comment