வெற்றி பெறுவதற்குத் தேவையான ஒரே வழி.

நெடுங்காலத்திற்கு முன்பு, தலைசிறந்த படைத்தளபதி ஓர் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிட்டது. போர்க்களத்தில் தனது வெற்றியை உறுதி செய்யக்கூடிய ஒரு தீர்மானத்தை அவர் எடுக்க வேண்டியிருந்தது. தனது படையில் இருந்த வீரர்களைவிடப் பன்மடங்கு அதிக எண்ணிக்கையிலான வீரர்களைக் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த ஓர் எதிரிக்கு எதிராக அவர் தனது படையை அனுப்பவிருந்தார். அவர் தனது வீரர்களைக் கப்பல்களில் ஏற்றி, ' எதிரியின் நாட்டிற்குச் சென்று தனது வீரர்களையும் போர்க்கருவிகளையும் அங்கு இறக்கி வைத்தார். பிறகு அவர்கள் பயணம் செய்த அனைத்துக் கப்பல்களையும் எரித்துச் சாம்பலாக்குமாறு அவர் தன் படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்.  போருக்கு முன் அவர் தன் வீரர்களைப் பார்த்து, "உங்கள் கண்களுக்கு முன்னால் படகுகள் எரிந்து சாம்பலாவதை நீங்கள் பார்க்கிறீர்கள். நாம் வெற்றி பெற்றாலொழிய இங்கிருந்து நம்மால் உயிருடன் திரும்பிச் செல்ல இயலாது. நமக்கு வேறு வழி இல்லை. வெற்றி அல்லது வீர மரணம்!" என்று முழங்கினார். இறுதியில் அவர்கள் வெற்றி வாகை சூடினர். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெறுகின்ற ஒவ்வொரு நபரும் தன்னுடைய கப்பல்களை எரித்துவிட்டு, பின்வாங்கிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் மூடிவிட வேண்டும். வெற்றி பெறுவதற்குத் தேவையான ஒரே வழி அதுதான்.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.