பெண் என்னும் சுமைதாங்கி.
பெண் என்னும் சுமைதாங்கி.
இரண்டு அகலமான கற்களை நெட்டுக்குத்தாக நட்டு, அவற்றின் மீது கிடை வசமாக மற்றொரு கற்பலகை வைக்கப்பட்ட அமைப்பைச் சாலையோரங்களில் பார்த்திருக்கலாம். இதுதான் சுமைதாங்கிக் கல். தரையிலிருந்து சுமார் 4 அல்லது 5 அடி உயரத்தில் கிடைவசக்கல் பொருத்தப்பட்டிருக்கும். போக்குவரத்து வசதியில்லாத காலத்தில் தலைச்சுமையாக பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் பிறர் உதவியின்றி இந்த சுமைகளை இறக்கி வைத்து, பின்னர் யாருடைய உதவியுமின்றி தலையில் ஏற்றிக்கொளாவார்கள். இவ்வாறு இளைப்பாறும் நேரத்தில் சுமையைத் தாங்குவதற்காக உருவான கற்களே சுமைதாங்கிக் கற்கள். வயிற்று சுமை தாங்காமல் இறந்த பெண்ணின் மன ஆறுதலுக்காக, மற்றவர்கள் சுமையை பகிர்ந்து கொள்ளுதல் என்னும் மனிதாபிமான நோக்கமே இதற்கு பின்னிற்கும் அம்சம்.
மகப்பேற்றின் போது வயிற்று சுமை தாங்காமல் இறந்த பெண்ணின் நினைவாகவே நடப்படுகின்றன. சாதாரணமாக இவற்றில் கல்வெட்டுகள் இருப்பதில்லை; விதிவிலக்காக ஒன்றிரண்டு கற்களில் இறந்த பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒரு சுமை தாங்கி என்பதை நிறுவவே சுமை தாங்கிக் கற்கள் நடப்படுகின்றன.
Comments
Post a Comment