எண்ணங்கள்.
எண்ணங்கள் மீது கவனம் செலுத்துவது அதற்கு ஊட்டம் அளிக்கும் செயல் போன்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எவ்வித முக்கியத்துவமும் தராமல், அக்கறை இன்றி இருந்தால், எண்ணங்கள் தானாக மடிந்துபோகத் தொடங்கிவிடும். அவை சக்திபெறவோ, உயிர் பெற்றிடவோ வேறு அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. நீங்கள்தான் அவற்றின் சக்தியாக இருக்கிறீர்கள். அவற்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எண்ணங்களில் இருந்து விடுபடுவது மிகவும் சிரமம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். எண்ணங்களிலிருந்து விடுபடுவது உலகிலேயே மிகவும் எளிதான செயலாகும். ஆனால் அதைச் சரியான முறையில் செய்ய வேண்டும். சாலையோரம் ஒதுங்கி நின்று விடுவதுதான் சரியான வழிமுறையாகும். போக்குவரத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போகவிடுங்கள். எந்த ஒரு நல்ல தீர்ப்போ அல்லது மோசமான தீர்ப்போ வழங்க வேண்டாம். பாராட்டவும் வேண்டாம். குறை சொல்லவும் வேண்டாம். அமைதியாக இருந்து விடுங்கள் என்பதே அதன் அர்த்தம். அதுபோதும். -ஓஷோ